அதிகம் ஏற்றுமதியான டாப் 5 மேட் இன் இந்தியா கார்கள்

Loading...

%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-5இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலக அளவில் நல்ல மதிப்பு உள்ளது. இந்த சிறப்பு, 2 வீலர்கள் மற்றும் கார்களுக்கும் பொருந்தும். கடந்த நிதி ஆண்டில், ‘மேட் இன் இந்தியா’ எனப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களின் ஏற்றுமதி ஏறுமுகத்தில் இருந்தது. இது, இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உற்பத்தி திறன்களை எடுத்து காட்டுகிறது. பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்கள், மிதமான செலவில், பிற வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய கூடிய அளவில் தரமான பொருட்களை உருவாக்க சிறந்த ஸ்தலமாக நமது இந்தியாவை கருதுகின்றனர். கடந்த நிதி ஆண்டில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
5) ஹூண்டாய் கிரான்ட் ஐ10;
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் அதிகம் ஏற்றுமதியான கார்களின் பட்டியலில், ஹூண்டாய் கிரான்ட் ஐ10 ஹேட்ச்பேக், 5-வது இடத்தில் உள்ளது. மாருதி சுஸுகி பிரான்ட் பெயரை அடுத்து, இந்திய வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாந மாடலாக உள்ளது. ஹூண்டாய் கிரான்ட் ஐ10 ஹேட்ச்பேக், இந்திய வாகன சந்தைகளில் அதிகம் விரும்பப்படும் மாடலாக உள்ளது. ஹூண்டாய் கிரான்ட் ஐ10, இந்த பட்டியலில் இடம்பிடித்து மிகவும் எதிர்பார்த்த விஷயமாகும். இந்தியாவின் 2-வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், கடந்த நிதியாண்டில், 44,000 கிரான்ட் ஐ10 ஹேட்ச்பேக்குகளை ஏற்றுமதி செய்தது.
4) மாருதி சுஸுகி ஆல்ட்டோ;
மாருதி சுஸுகி ஆல்ட்டோ, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக அளவில் அதிகம் ஏற்றுமதியான கார்களின் பட்டியலில், 4-வது இடத்தில் உள்ளது. மாருதி சுஸுகி ஆல்ட்டோ தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக உள்ளது. மேலும், இது விற்பனையிலும் பட்டையை கிளப்பி வருகிறது. முக்கிய செய்தி என்னவென்றால், முந்தைய ஆண்டை காட்டிலும், கடந்த நிதி ஆண்டில், மாருதி சுஸுகி ஆல்ட்டோ கார்களின் விற்பனை 70% வரை அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம், கடந்த நிதி ஆண்டில், 54,656 மாருதி சுஸுகி ஆல்ட்டோ கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது, இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய சாதனையாக உள்ளது.
3) ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ;
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் அதிகம் ஏற்றுமதியான கார்களின் பட்டியலில், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ 3-வது இடத்தில் உள்ளது. டீசல்கேட் எனப்படும் மாசு உமிழ்வு ஊழலில்சிக்கிய நிலையிலும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏராளமான கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தான், ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் இருந்து கார் ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், வென்ட்டோ மாடலில் மட்டும் 63,157 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
2) நிஸான் மைக்ரா;
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் அதிகம் ஏற்றுமதியான கார்களின் பட்டியலில், நிஸான் மைக்ரா 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம், ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த அதன் இணை நிறுவனம் போல், இந்திய வாகன சந்தைகளில் வெற்றி பெற முடியவில்லை. எனினும், இதன் ஏற்றுமதி நடவடிக்கை, இதற்கு நல்ல பலனை அளித்துள்ளது. நிஸான் நிறுவனம், மொத்தம் 75,456 மைக்ரா கார்களை ஏற்றுமதி செய்தது. இதன் மூலம், இந்த ஜூலை மாதத்தில், நிஸான் மைக்ரா தான் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார் என்ற சாதனையை படைத்தது. இந்தியாவில் தயாரிக்கப்படும் நிஸான் மைக்ரா, 100-க்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மைக்ரா மாடலானது, நிஸான் நிறுவனம், 2015-ஆம் ஆண்டில் சாதனை விற்பனை நிகழ்த்துவதற்கும், ஐரோப்பாவில் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற சாதனையையும் நிகழ்த்துவதற்கு உதவிகரமாக இருந்துள்ளது.
1) ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்;
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் அதிகம் ஏற்றுமதியான கார்களின் பட்டியலில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், இந்திய வாகன சந்தைகளில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால், ஏற்றுமதியில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தான் நம்பர் ஒன் காராக உள்ளது. முன்னதாக, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அதிகம் ஏற்றுமதியான கார்களின் பட்டியலில், 5-வது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டில், 51% வளர்ச்சி கண்டு முதல் இடத்தை பிடித்தது. முதல் இடத்தில் இருந்த நிஸான் மைக்ராவை பின்னுக்கு தள்ளி, ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 83,325 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களை பிற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது.
இறுதி கருத்து;
கார் உற்பத்தி நிறுவனங்கள், இந்திய ஆட்டோமொபைல் துறையை, வெறும் உள்ளூர் சந்தைகள் அடிப்படையில் மட்டும் லாபகரமானதாக கருதவில்லை. இந்தியாவை, சிறந்த உற்பத்தி மையமாகவும், இங்கிருந்து பிற நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்ய சிறந்த ஸ்தலமாகவும் கருதுகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply