அடுத்த தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

Loading...

%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b8%e0%af%81%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%bfசுஸுகி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஜிம்னி எஸ்யூவி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படலாம், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகிறது. சுஸுகி ஜிம்னி எஸ்யூவி பற்றிய அதிகப்படியான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
சுஸுகி ஜிம்னி எஸ்யூவி…
சுஸுகி ஜிம்னி எஸ்யூவி, மாருதி சுஸுகியின் தாய் நிறுவனமான ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் சுஸுகி நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்யும் மாடல் ஆகும். இது பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் உற்பத்தி;
அடுத்த தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்டிடிவி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. சுஸுகி நிறுவனத்திற்கு சொந்தமான உற்பத்தி ஆலை குஜராத்தில் உள்ளது. இந்த உற்பத்தி ஆலையில் தான், இந்த சுஸுகி ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் இதன் உற்பத்தி, 2017-ஆம் ஆண்டு முதல் துவங்கப்படும்.
அறிமுகம்;
இந்தியாவில் 2017-ல், அடுத்த தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி துவங்கும் நிலையில், இது இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேம்பாட்டிற்கான அவசியம்;
மூன்றாம் தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி, 1998-ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் உள்ளது. தொடர்ந்து நிலவி வரும் ஆரோக்கியமான டிமான்ட் காரணமாக, சுஸுகியின் ஐரோப்பிய டீலர்கள், 18-வருட பழைய காம்பேக்ட் எஸ்யூவியான சுஸுகி ஜிம்னி எஸ்யூவியில் மேம்பாடுகள் செய்து வழங்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். சுஸுகி நிறுவனமும் அவர்களின் கருத்துகளை ஏற்று, சுஸுகி ஜிம்னி எஸ்யூவியை மேம்பாடுகள் செய்து வழங்க முடிவு செய்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி;
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள சுஸுகி ஜிம்னி எஸ்யூவி, தென் கிழக்கு ஆசியா, பிரேசில், ஐரோப்பா மற்றும் சுஸுகியின் தாய் நாடான ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
பிளாட்ஃபார்ம்;
புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி, பலனோ மற்றும் இக்னிஸ் மாடல்களின் வடிவமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4டபுள்யூடி;
புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி, 4டபுள்யூடி எனப்படும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்டிருக்கும்.
இஞ்ஜின்;
புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி, 3 சிலிண்டர்கள் உடைய 1.0 லிட்டர், டர்போசார்ஜ்ட், பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் முதன் முதலாக பலேனோ ஆர்எஸ் மாடலில் பொருத்தப்பட்டுள்ளது.
கூடுதல் சக்திவாய்ந்த இஞ்ஜின்;
புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவிக்கு, கூடுதல் சக்திவாய்ந்த 1.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்படலாம். இந்த இஞ்ஜின் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டதாக இருக்கும்.
பிஎஸ்4-க்கு இணக்கம்;
புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவிக்கு பொருத்தப்பட வாய்ப்புகள் இரண்டு இஞ்ஜின்களுமே, பிஎஸ்4 விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும்.
பெயர் மாற்றம்;
சுஸுகி நிறுவனம், இந்த புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்தால், இதை சாமுராய் என்ற பெயரில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. இல்லாவிடில், புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவிக்கு, தங்களின் சிறப்புமிக்க ஜிப்ஸி என்ற பெயரே சூட்டப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply