ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் பேஸ் மாடலிலும் டூயல் ஏர்பேக் வசதி

Loading...

%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bfஃபோர்டு நிறுவனம் தயாரி்த்த மாடல்களிலேயே செம கிளாஸ் அண்டு மாஸ், ஈகோ ஸ்போர்ட்தான். காம்பேக்ட் எஸ்யூவி ரக மாடலான அந்த கார், நாட்டின் பட்டி, தொட்டியெல்லாம் புகுந்துவிட்டது. உண்மைதாங்க… நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கூட ஈகோ ஸ்போர்ட் கார் வலம் வருவதை கண்கூடாகப் பார்க்க முடியாது. அதற்குக் காரணம், அந்த மாடலின் ஸ்டைலான தோற்றம், சிறப்பான செயல்பாடுதான். இந்த நிலையில்தான் மாருதி நிறுவனம், தனது விட்டாரா பிரேஸா எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தியது. பொதுவாகவே மாருதியின் தயாரிப்புகளுக்கு ஒரு தனி வரவேற்பு உள்ளது. அதன் அடிப்படையில் விட்டாரா பிரேஸா மாடல் விற்பனையில் சிறப்பிடம் பெற்றது. இதையடுத்து மார்க்கெட்டில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு அதிரடி அம்சங்களை ஈகோ ஸ்போர்ட் மாடலில் புகுத்தியுள்ளது ஃபோர்டு நிறுவனம். அதிலும் குறிப்பாக அந்த மாடலின் விலையை ரூ.1.12 லட்சம் வரை குறைத்துள்ளது. இதைத் தவிர ஈகோஸ்போர்ட்டின் பேஸ் மாடலிலும் டூயல் ஏர் பேக் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபோர்டு. எப்போதுமே பாதுகாப்பு விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் ஃபோர்டு நிறுவனத்தின் இந்த புதிய நடவடிக்கை வாடிக்கையாளர்களின் வெகுவாக ஈர்க்கும். மாருதியைப் பொருத்தவரை, விட்டாரா பிரேஸாவிலும் முன்புறத்தில் டூயல் ஏர் பேக் வசதி உள்ளது. ஆனால், இது ஆப்ஷனாக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஈகோஸ்போர்ட்டில் பேஸ் மாடலில் நிரந்தர பாதுகாப்பு வசதியாக டூயல் ஏர் பேக்-கள் தரப்பட்டுள்ளன. இதைத் தவிர, சிறப்பம்சங்கள் என ஈகோஸ்போர்ட்டில் எடுத்துக் கொண்டால், நம்ம ஊர் சாலைகளின் நிலை அறிந்து டிசைன் செய்யப்பட்டது இந்த மாடல். இதனால், பள்ளம், மேடு, வேகத் தடை, குறுகிய சாலை என அனைத்து மூலை முடுக்குகளிலும் அசால்ட்டாக நுழைந்து விடும் இந்த கார். இதைத் தவிர ஆண்ட்டி லாக் பிரேக் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் ஆகியவையும் உள்ளன. ரிமோட் சாவி, பார்க்கிங் கேமரா, லெதர் சீட்கள், பின் இருக்கையில் சார்ஜர் வசதி உள்ளிட்டவை ஈகோ ஸ்போர்ட்டின் ஹைலைட்டான விஷயங்கள். எஞ்சின் திறனைப் பொருத்தவரை மூன்று வகையான எஞ்சின்களில் இந்த மாடல் அறிமுகமாகியுள்ளது. 1.0 லிட்டர் ஈகோ பூஸ்ட் எஞ்சினானது, 123 பிஎச்பி முறுக்கு விசையையும், 170 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 5 மேனுவல் கியர்கள் இதில் உள்ளன. 1.5 லிட்டர் திறனுடைய பெட்ரோல் எஞ்சின், 110 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 5 மேனுவல் கியர்கள் மற்றும் 6 ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் உள்ளன. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் 5 மேனுவல் கியர்கள் உள்ளன. அந்த எஞ்சினானது 99 பிஎச்பி மற்றும் 205 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முந்தப் போவது விட்டாரா பிரேஸாவா? ஈகோ ஸ்போர்ட்டா? என்பதை அறிய சிறிது காலம் காத்திருப்போம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply