ஃபோர்டு ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் விலை அதிரடியாக குறைப்பு – முழு விவரம்

Loading...

%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%83%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8b-%e0%ae%83%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8b-%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aaஃபோர்டு ஆர்வலர்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷ செய்தி காத்திருக்கிறது. ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் ஆகியவற்றின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், நீண்ட காலமாக இந்தியா வாகன சந்தைகளில் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்திய வாகன சந்தைகளில், ஃபோர்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் மிகவும் நம்பகமான தயாரிப்புகளில் ஒன்றாக உள்ளன. ஃபோர்டு கார்கள் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இது மிக சரியான தருணம் என்று சொல்லலாம். எந்த மாடலின் எந்த வேரியன்ட்கள் மீது எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது என வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
விலை குறைப்பு;
ஃபோர்டு நிறுவனம் கடந்த 4 மாதங்களில், 2-வது முறையாக விலை குறைப்பு செய்துள்ளனர். அதிகப்படியாக, சுமார் 90,000 ரூபாய் வரை தள்ளுபடிகள் அளிக்கப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விலைகள் கடந்த மே மாதம் தான் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு சமீபத்தில் அறிமுகம் செய்யபட்ட விட்டாரா பிரெஸ்ஸாவிடம் இருந்து எழும் போட்டியை சமாளிப்பதற்காக செய்யப்பட்டது. எல்லா நிறுவங்களும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்றவாறு தங்கள் மாடல்களின் விலைகளை குறைப்பதும், உயர்த்துவதும் சகஜமான விஷயமாகவே உள்ளது. விலைகள் குறைக்கபட்டுள்ளதை அடுத்து, புதிய விலைகளை அடுத்து அடுத்து வரும் ஸ்லைடரில் அறிந்து கொள்ளலாம்.
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியன்ட் விலைகள்;
ஆம்பியன்ட் – 5,28,150 ரூபாய் ட்ரென்ட் – 5,76,150 ரூபாய் (பழைய விலை 6,01,150 ரூபாய்) டைட்டேனியம் – 5,99,150 ரூபாய் (பழைய விலை 6,90,150 ரூபாய்) டைட்டேனியம்+ – 6,80,150 ரூபாய் (பழைய விலை 7,45,150 ரூபாய்)
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் 1.5 லிட்டர் டீசல் வேரியன்ட் விலைகள்;
ஆம்பியன்ட் – 6,37,850 ரூபாய் ட்ரென்ட் – 6,85,850 ரூபாய் (பழைய விலை 7,10,850 ரூபாய்) டைட்டேனியம் – 7,08,850 ரூபாய் (பழைய விலை 7,99,850 ரூபாய்) டைட்டேனியம்+ – 7,89,850 ரூபாய் (பழைய விலை 8,54,850 ரூபாய்)
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் 1.5 லிட்டர் பெட்ரோல் – ஆட்டோமேட்டிக் வேரியன்ட் விலைகள்;
டைட்டேனியம் – 8,19,750 ரூபாய்
ஃபோர்டு ஃபிகோ 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியன்ட் விலைகள்;
என்ட்ரி – 4,53,700 ரூபாய் ஆம்பியன்ட் – 4,82,700 ரூபாய் ட்ரென்ட் – 5,23,700 ரூபாய் டைட்டேனியம் – 5,65,700 ரூபாய் (பழைய விலை 5,94,700 ரூபாய்) டைட்டேனியம்+ – 6,28,700 ரூபாய் (பழைய விலை 6,58,700 ரூபாய்)
ஃபோர்டு ஃபிகோ 1.5 லிட்டர் டீசல் வேரியன்ட் விலைகள்;
என்ட்ரி – 5,62,750 ரூபாய் ஆம்பியன்ட் – 5,91,750 ரூபாய் ட்ரென்ட் – 6,32,750 ரூபாய் டைட்டேனியம் – 6,53,750 ரூபாய் (பழைய விலை 7,03,750 ரூபாய்) டைட்டேனியம்+ – 7,17,750 ரூபாய் (பழைய விலை 7,67,750 ரூபாய்)
ஃபோர்டு ஃபிகோ 1.2 லிட்டர் பெட்ரோல் – ஆட்டோமேட்டிக் வேரியன்ட் விலைகள்;
டைட்டேனியம் – 7,27,100 ரூபாய் குறிப்பு; இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.
இறுதி கருத்து;
ஃபோர்டு நிறுவனம் போல் பல்வேறு நிறுவனங்கள், தங்களின் கார் மாடல்கள் மீது அவ்வப்போது தள்ளுபடிகள் வழங்குவது வழக்கம். ஃபோர்டு தயாரிப்புகள் வாங்க விருப்பபட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், இந்த அரிய வாய்ப்பை உபயோகப்படுத்தி கொண்டு பயன் பெறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply