ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Loading...

%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கும் ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது. பல்வேறு நிறுவனங்களின் கார் மாடல்களின் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கப்படும் ஸ்பை படங்கள் வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், ஃபோக்ஸ்வேகன் போலோ எஸ்யூவியின் சோதனைகளின் போது எடுக்கபட்ட ஸ்பை படங்களும் தற்போது வெளியாகியது. ஃபோக்ஸ்வேகன் போலோ எஸ்யூவி தொடர்பான கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம். ஃபோக்ஸ்வேகன்
போலோ காம்பேக்ட் எஸ்யூவி…
ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவி, ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரிக்கும் மாடல் ஆகும். ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவி, போலோ ஹேட்ச்பேக்கை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய வாகன சந்தைகளில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மேற்கொள்ள உள்ள ஆக்ரோஷமான கார் அறிமுகங்களின் ஒரு பகுதியாக, அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோற்றம்;
ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவியின் சோதனைகள் கடுமையான உருமறைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவி, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் சிறிய வடிவம் போல் உள்ளது.
டாப்லெஸ் மாடல்;
ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவியினால், ஃபோக்ஸ்வேகனின் டி-கிராஸ் ப்ரீஸ் எஸ்யூவி அடிப்படையில் ஒரு டாப்லெஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன் தோற்றம்;
ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவி, பார்ப்பதற்கு போலோ போன்றே காட்சியளிக்கிறது. மேலும், அதே பாக்ஸியான தோற்றம் கொண்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவியின் முன் பக்கத்தில் உள்ள ஹெட்லேம்ப்கள், போலோ மாடலில் காணப்படுவது போலவே உள்ளது.
பின் தோற்றம்;
ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவியின் பின் பக்கத்தில், புதிய செட் டெயில் லேம்ப்கள் உள்ளன. இது பூட் லிட் வரை நீள்கிறது.
பிளாட்ஃபார்ம்;
ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவி, ஃபோக்ஸ்வேகனின் வலைவுத்தன்மை உடைய எம்க்யூபி பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
போட்டி;
ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவி, இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டால், இந்த காம்பேக்ட் எஸ்யூவியை போல் ஸ்கோடா பேட்ஜ் உடைய குளோனை எதிர்பார்க்கலாம். ஃபோக்ஸ்வேகன் போலோ காம்பேக்ட் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளில், ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவியுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply