ஃபோக்ஸ்வேகனின் போலோ, வென்ட்டோ மாடல்களில் 2 புதிய எடிஷன்கள் அறிமுகம்

Loading...

%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் வென்ட்டோ மற்றும் போலோ ஆகிய 2 மாடல்கள், பண்டிகை காலங்களுக்கு முன்பாக மேம்படுத்தி வழங்க திட்டமிட்டுள்ளனர். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மேம்படுத்தி வழங்க உள்ள 2 புதிய எடிஷன்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2 புதிய எடிஷன்கள்;

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், போலோ ஹேட்ச்பேக் மற்றும் வென்ட்டோ செடான் ஆகிய மாடல்களில் புதிய வேரியன்ட்களை அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த 2 புதிய எடிஷன்களும் பண்டிகை காலங்களுக்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

மேம்பாடுகள்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் மற்றும் வென்ட்டோ செடான் மாடல்களை மேலும் சிறப்பானதாக மாற்ற பல்வேரும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளது. இந்த மேமபடுத்தப்பாடு வெளியாகும் மாடல்கள், ஃபோக்ஸ்வேகனின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஹைலைன் பிளஸ்;

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான் மாடலின் கீழ் தயாரிக்கப்படும் ஹைலைன் பிளஸ் வேரியன்ட், பண்டிகை காலங்களுக்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்படும். ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடானின் ஹைலைன் பிளஸ் வேரியன்ட்டில், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டிஆர்எல்-கள் ஆகிய அம்சங்கள் புதியதாக சேர்க்கப்பட உள்ளது.

கிடைக்கும் இஞ்ஜின் தேர்வுகள்;

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான் மாடலின் ஹைலைன் பிளஸ் வேரியன்ட், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளுடனும் கிடைக்கும்.

ஆல்ஸ்டார் வேரியன்ட்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக், இந்திய வாகன சந்தைகளில், புதிய ஆல்ஸ்டார் வேரியன்ட்டில் கிடைக்க உள்ளது. முன்னதாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், போலோ ஹேட்ச்பேக்கின் புதிய ஆல்ஸ்டார் வேரியன்ட்டை, 2016 மோட்டார் ஷோவில் காட்சிபடுத்த்தியது.

சிறப்பு அம்சங்கள்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக்கின் புதிய ஆல்ஸ்டார் வேரியன்ட்டில், ரெயின் சென்சிங் வைப்பர், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், ஃபோன் புக் வியூவர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

புதிய இஞ்ஜின் தேர்வு;

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தங்களின் போலோ ஹேட்ச்பேக் மற்றும் வென்ட்டோ செடான் மாடல்களில் அறிமுகம் செய்யப்படும் புதிய வேரியன்ட்கள், புதிய 1.5 லிட்டர் டிடிஐ டீசல் இஞ்ஜினுடன் வெளியாகிறது. இந்த புதிய 1.5 லிட்டர் டிடிஐ டீசல் இஞ்ஜின் தான், இந்தியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் செயல்திறன் மிக்க இஞ்ஜின் ஆகும். எனினும், இந்த இஞ்ஜின் திறன் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply