ஃபெராரி 488 ஜிடிபிக்குப் போட்டியாகக் களமிறங்குகிறது ஆஸ்டன் மார்டின் வி8 சூப்பர் கார்

Loading...

%e0%ae%83%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-488-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8bஉலகின் பெரும்பாலான நாடுகளை தனது காலனி ஆதிக்கத்துக்குக் கீழ் கொண்டு வந்த பெருநாடு பிரிட்டன். அந்த தேசத்தின் மண்ணிலிருந்து தோன்றிய புகழ்பெற்ற கார் நிறுவனம் ஆஸ்டன் மார்ட்டின். காலனித்துவ நிலையிலிருந்து அனைத்து நாடுகளும் விடுதலை அடைந்துவிட்ட போதிலும், இந்த ஆஸ்டன் மார்ட்டின் ஸ்போர்ட் கார்களுக்கு சர்வதேச அளவில் பல லட்சக்கணக்கான ஆட்டோ மொபைல் ஆர்வலர்கள் அடிமையாகவே உள்ளனர். அந்த அளவுக்கு ஸ்டைலான லுக்கையும், அற்புதமான செயல்பாடுகளையும் கொண்டவையாக அவை விளங்கி வருகின்றன. இரண்டாம் நூற்றாண்டுத் திட்டம் என்று அந்த நிறுவனம் ஒரு தொலை நோக்குத் திட்டத்தை வெளியிட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ஆட்டோ மொபைல் மார்க்கெட்டில் எத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்வது என்பது குறித்த தகவல்கள் தான் அந்தத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று, வரும் 2022 -வரை ஆண்டு தோறும் புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம் செயல் திட்டம் வகுத்திருந்தது. அதன் அடிப்படையில் பார்த்தால் மிட் எஞ்சின் மாடலில் வி 8 சூப்பர்காரை அடுத்த 6 ஆண்டுகளில், அதாவது 2022-இல் அறிமுகப்படுத்தப் போகிறது ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம். பார்க்க சூப்பர் ஸ்டைலாகவும், சிறந்த செயல் திறனும் கொண்ட அந்த ஸ்போர்ட் கார் மார்க்கெட்டுக்கு வந்தால், ஃபெராரி 488 ஜிடிபி மாடலுக்கு சரியான போட்டியாக இருக்கும். ஏனென்றால் தற்போது மார்க்கெட்டில் அதே அம்சங்களுடனான ஸ்போர்ட் காராக 488 மாடல் மட்டுமே உள்ளது. மேலும் ஸ்போர்ட் கார்கள் செக்மெண்டில் பிரதானப் போட்டியாளர்களாக இருப்பதும் அந்த இரு நிறுவனங்களே. ஆஸ்டன் மார்ட்டினின் வி 8 சூப்பர் கார் ஆட்டோ மொபைல் ஆர்வலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் மாடல்களில் ஒன்று. எனவே, அதில் உள்ள சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றை முழுமையாக அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் எழுந்துள்ளது. விரைவில் அந்தத் தகவல்களை ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலைத் தவிர, டிபிஎக்ஸ், இரண்டு செடான் கார்கள், ஏஎம் ஆர்பி – 001 ஹைபர் கார் ஆகியவற்றையும் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply