ஃபார்முலா – இ ரேஸில் பங்கேற்கும் அல்ட்ரா டிசைன் கார்களின் படங்கள் வெளியீடு

Loading...

%e0%ae%83%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%87-%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87உலகம் முழுவதும் ஆங்காங்கே பல இடங்களில் கார் ரேஸ்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதில் மிகச் சில ரேஸ்கள் மட்டுமே மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. வழக்கமான பந்தயங்களில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு இருக்கும் ரேஸ்களும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்து விடுகின்றன. அந்த வரிசையில் அமைந்தததுதான் ஃபார்முலா – இ ரேஸ்கள். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், முழுக்க, முழக்க எலெக்ட்ரிக் ரேஸ் கார்கள் மட்டுமே பந்தயத்தில் பங்குபெறும். அவற்றின் வித்தியாசமான வடிவமைப்பு, செயல் திறன் ஆகியவை பார்ப்பவர்களை ஈர்த்து விடும். ஃபார்முலா – இ ரேஸின் மூன்றாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி ஹாங்காங்கில் தொடங்குகிறது. இதைப் பார்க்க ஏராளமான மோட்டார் ரேஸ் ஆர்வலர்கள் இப்போதே ஹாங்காங் பயணத்துக்குத் தயாராகி விட்டார்கள். இந்த நிலையில், அந்த ரேஸில் பங்கேற்கும் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட கார்களின் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி வைரல் ஆகியுள்ளன. வழக்கமான காரில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளன இ – ரேஸ் கார்கள். முன்பக்கம் விங்ஸ் (சிறகுகள்) போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளன அந்த கார்கள். இதன் காரணமாக இவை ரோபோ ரேஸ் கார்களைப் போன்ற லுக்கைத் தருகின்றன. ஃபார்முலா – இ ரேஸ் பந்தயத்தில் உலகின் பல்வேறு அணிகள் பங்குபெறுகின்றன. அதில், இந்தியாவின் மஹிந்திரா அணியும் ஒன்று. புது வடிவத்திலான இ – ரேஸ் காரை அண்மையில் டிராக்கில் சோதித்துப் பார்த்தது மஹிந்திரா அணி. இது குறித்து ஃபார்முலா – இ ரேஸின் தலைவர் எலஜென்ட்ரோ அகாக் கூறுகையில், பொதுவாகவே மற்ற பந்தயங்களைக் காட்டிலும் இ – ரேஸ் முற்றிலும் வேறுபட்டது, அதிலும் அதில் பங்கேற்கும் கார்களின் வடிவமைப்பும் மற்ற வாகனங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்றார். மறு வடிவம் பெற்றுள்ள முகப்பு விங்க்ஸ் குறித்து கருத்து தெரிவித்த அவர், காற்றின் இயக்கத்துக்குத் தக்கவாறு செயல்படும் வகையில் அந்த விங்க்ஸ் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, பிற ரேஸ் கார்களைக் காட்டிலும் இது தனித்துவமாக உள்ளது என்றார். இந்த புதிய வடிவிலான ரேஸ் காரின் புகைப்படங்களை அண்மையில் மஹிந்திரா நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டது. மொத்தத்தில் அந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆர்வத்தை ஒரு படி அதிகரிக்கவே செய்துள்ளது எனலாம். புதிய வடிவிலான இ – ரேஸ் கார்களின் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருக்கும் என்பதை அறிய காத்திருப்போம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply