SOUNDCLOUD இனை கொள்வனவு செய்யவுள்ள SPOTIFY

Loading...

soundcloud-%e0%ae%87%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8dSpotify என்பது பல மில்லியன் கணக்கான டிஜிட்டல் பாடல்களை கேட்டு மகிழ உதவும் தளமாகும்.
இதேவேளை மற்றுமொரு தளமான SoundCloud ஆனது ஒலி கோப்புக்களை பதிவேற்றல் மற்றும் கேட்டு மகிழும் சேவையை தருகின்றது.
இவ் இரு தளங்களுமே பல மில்லியன் கணக்கான பயனர்களை தம்மகத்தே கொண்டு முன்னணியில் திகழ்கின்றன.
இந் நிலையில் Spotify நிறுவனம் SoundCloud இனை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்பொருட்டு இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது.
SoundCloud தளமானது கடந்த ஜுன் மாதத்தில் 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி உடையதாக இருந்துள்ளதுடன், தற்போது 700 அமெரிக்க டொலர்கள் பெறுமதி உடையதாக பிரபல்யம் அடைந்துள்ளது.
அத்துடன் SoundCloud 175 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள அதேவேளை, Spotify ஆனது 40 மில்லியன் வரையான சந்தா செலுத்தும் பயனர்களையும், 100 மில்லியன் சாதாரண பயனர்களையும் கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே Spotify ஆனது SoundCloud இனை கொள்வனவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply