PRIVACY POLICY-யை முதன் முதலாக மாற்றியது வாட்ஸ் அப்

Loading...

privacy-policy-%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%afஇந்த காலகட்டத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் 25ம் திகதி Privacy Policy-யை முதன் முதலாக மாற்றியது வாட்ஸ் அப்.
அதாவது, உங்களுக்கு அளிக்கும் சேவைகளை மேம்படுத்துவதற்காக வாட்ஸ் அப் நம்பர் உள்ளிட்ட தகவல்களை பேஸ்புக், அட்லஸ், லைவ்ரைல், இன்ஸ்டாகிராம், அக்குலஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என அறிவித்திருந்தது.
இதற்கு உலக நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஜேர்மனியில் இச் செயற்பாடு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்கும் நோக்கத்திலே இச்செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இச்செயற்பாட்டை மீண்டும் மேற்கொண்டு எஞ்சிய பயனர்களின் தரவுகளை பெறும் பொருட்டு பேஸ்புக் நிறுவனம் மேன் முறையீடு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply