IPHONE 7 கைப்பேசியில் குறைபாடு

Loading...

iphone-7-%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81பல்வேறு நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் நிலையில் அப்பிளின் ஐபோன்களுக்கு என்று எப்பவுமே ஒரு தனி வரவேற்பு உண்டு.
எனினும் ஏனைய கைப்பேசிகளுடன் ஒப்பிடும்போது இக் கைப்பேசிகளிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
அண்மையில் AnandTech எனும் நிறுவனமானது பல்வேறு கைப்பேசிகளினதும் சார்ஜ் ஆகும் வேகம் தொடர்பாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
இதன்போது அப்பிளின் iPhone 7 ஆனது மிகவும் மந்தமாக சார்ஜ் ஆவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 2.08 மணித்தியாலங்கள் எடுக்கின்றது.
இதில் முன்னணியில் Meizu PRO 6 எனும் கைப்பேசியும், சாம்சுங் நிறுவனத்தின் Galaxy S7 கைப்பேசியும் காணப்படுகின்றன.
இக் கைப்பேசிகள் 100 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு எடுக்கும் நேரம் 1.51 மணித்தியாலமாகக் காணப்படுகின்றது.
இவற்றுக்கு அடுத்ததாக அப்பிள் நிறுவனத்தின் iPhone SE காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவை தவிர ஏனைய சில மொபைல் சாதனங்கள் முழுமையாக சார்ஜ் செய்வதற்கு எடுக்கும் நேரங்கள் கீழே உள்ள படத்தில் தரப்பட்டுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply