IPHONE 7 கைப்பேசியின் ஹோம் பட்டனுக்கு தீர்வு | Tamil Serial Today Org

IPHONE 7 கைப்பேசியின் ஹோம் பட்டனுக்கு தீர்வு

Loading...

iphone-7-%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b9%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9அப்பிள் நிறுவனமானது அண்மையில் அறிமுகம் செய்த iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஹோம் பட்டன் இருப்பது தெரிந்ததே.
ஆனால் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளில் இருப்பது போன்று வன்பொருள் (Physical or Hardware) பாகமாக தரப்படவில்லை.
மாறாக Haptic எனும் சென்சார் மூலம் இயங்கும் தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக காணப்படுகின்றது.
இப் பொத்தான் ஆனது அதன் மென்பொருள் பாகத்தில் ஏற்படும் கோளாறுகளினால் சில சமயங்களில் செயற்படாதுவிடுகின்றது.
இதனை தவிர்ப்பதற்கு மாற்று வழி ஒன்று தரப்பட்டுள்ளது. அதாவது கைப்பேசியின் திரையில் தற்காலிகமான ஹோம் பட்டன் ஒன்றினை தோற்றுவிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.
பழுதடைந்த பிரதான ஹோம் பட்டனை திருத்தம் செய்யும் வரையில் இப் பொத்தானை பயன்படுத்த முடியும்.
எனினும் அடுத்து வரும் வருடங்களில் பிரதான ஹோம் பட்டனை அமைக்கும்போது இருவகை தொழில்நுட்பமும் (Physical, Haptic) கருத்தில் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN