I CAN’T WAKE UP மாறுபட்ட அலார செயலி

Loading...

i-cant-wake-up-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bfசில வருடங்களுக்கு முன்னர் வரை காலையில் சரியான நேரத்திற்கு எழுவதற்கு அலாரம் கிளாக் என்னும் கடிகாரத்தை பலர் பயன்படுத்தினார்கள்.
பின்னர் செல்போனிலேயே அலாரம் வைத்து பயன்படுத்தினார்கள். அந்த அலார சத்தத்தையும் கண்டுகொள்ளாமல் தூங்குபவர்களை எழுப்ப பல விதமான செயலிகள் இருக்கின்றன.
இந்த ஆன்ட்ராய்ட், ஐபோன்களில் பயன்படுத்தபடும் செயலிகளில் புது வரவாக இருப்பது தான் ‘ I Can’t Wake Up’ செயலி. இது மற்ற அலார செயலிகளில் இருந்து மாறுபட்டதாகும்.
இதில் நாம் அலாரம் அடிக்க வேண்டிய நேரத்தை செட் செய்ய வேண்டும். நாம் குறித்த நேரத்தில் அலாரம் அடிக்க தொடங்கும்.
அதனை தொடர்ந்து புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு, கணித புதிர் போன்ற எட்டு வகையான விளையாட்டு புதிர்களை முடிக்க வேண்டும், அப்போது தான் அலாரம் நிற்கும், அது வரை அடித்து கொண்டே இருக்கும் வகையில் அது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த எட்டு புதிர்களை நான் முடிப்பதற்குள் நம் தூக்கம் கலைவது உறுதி, நம் வேலையை பார்க்க சுறுசுறுப்பாக கிளம்பலாம்

Loading...
Rates : 0
VTST BN