30 களில் இளமையான முகத்தை பெற என்ன செய்ய வெண்டும்

Loading...

30-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%af%86முப்பது வயதுகளில்தான் சருமத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். கண்களுக்கு அடியில் பள்ளம், கருவளையம், சுருக்கம், சரும தொய்வு, கன்னங்கள் தளர்ந்து போவது என லேசாக முதுமையின் முதற்படிக்கட்டாய் எட்டிப்பார்க்கும். இந்த சமயங்களில் விழித்துக் கொண்டால் உங்கள் சருமத்தை 50 வயதுவரைக்கும் இளமையாக வைத்திருக்கலாம். ஆகவே 30 களில் நீங்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டியது சரும வறட்சி அடையாமலும், தளர்வடையாமலும் இருக்கச் செய்யவதேயாகும். அதற்கு முதல் வேலையாக நீங்கள் நிறைய நீர் குடிப்பதை ஒரு கடமையாக வைத்திருங்கள். உங்கள் சரும பராமரிப்பை கையாள வேண்டும். கிளிசரின் இயற்கையான , மூலிகைச் செடிகளிலிருந்து பிரித்தெடுக்கபப்டும் எண்ணெய். இது சுருக்கங்களை போக்கி, இளமையாகவும், மிருதுவான சருமத்தை பெற உதவுகிறது. அதனைக் கொண்டு எப்படி உங்கள் இளமையை காக்கலாம் என பார்க்கலாம்.


கருமையை அகற்ற :
மத்திய வயதில் முகத்தில் அதிக கருமை ஏற்படும். மூக்கு, கன்னத்தின் ஓரம், தாடை ஆகிய பகுதிகளில் இறந்த செல்களின் விளைவால் இவ்வாறு உண்டாகும். இதனை தடுக்க எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் சம அளவாக 1 ஸ்பூன் எடுத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.


சுருக்கம் மறைய :
இந்த கலவை அருமையான பலன் தரும். சுருக்கம், கருமை, கரும்புள்ளி ஆகியவை மறைந்து இளமையாக காட்சியளிக்கும். கடலை மாவு மற்றும் சந்தனம் பொடி, ஆகியவை சம அளவு எடுத்து அதில் 2 டீஸ்பூன் கிளிசரின் கலந்து முகத்தில் தடவி வந்தால் விரைவில் பயன் அளிக்கும்.


அழுக்குகள் களைய :
காய்ச்சாத பாலை 2 ஸ்பூன் எடுத்து அதில் 1 ஸ்பூன் கிளசரின் கலந்து கழுத்து முகம் ஆகிய இடங்களில் தடவவும். காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இதனால் சரும துவாரங்களில் அடைபட்டிருக்கும் இறந்த செல்கள், அழுக்குகள் வெளியேறி முகம் இளமையாக இருக்கும்.


சருமம் மிளிர :
உங்கள் சருமத்தில் உண்டாகும் எல்லாவித பிரச்சனைகளையும் இந்த குறிப்பு நிவர்த்தி செய்யும். 2 ஸ்பூன் அளவு வேப்பிலையை பொடி செய்து அதனுடன் 1 ஸ்பூன் கிளிசரின் கலந்து முகத்தில் தேய்க்கவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் பிராகசமான சருமம் கிடைக்கும்


மிருதுவான சருமம் கிடைக்க :
30 வயதுகளில் சருமத்தில் கடினத்தன்மை உண்டாகும். அதனை மாற்ற , பழுத்த வாழைபழம் சிறிது எடுத்து நன்றாக மசித்து அதனுடன் 1 ஸ்பூன் கிளிசரின் கலந்து முகத்துல் தேய்க்கவும். இதனால் சருமம் மிருதுவாகவும், தளர்வு நீங்கி, இளமையாகவும் இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply