2 மாதம் விடுப்பில் ​பேஸ்புக் அதிபர் மார்க் ஜீக்கர்பெர்க்

Loading...

2-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e2%80%8b%e0%ae%aa%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aaபேஸ்புக் அதிபர் மார்க் ஜீக்கர்பெர்க், பிறக்கவிருக்கும் தமது குழந்தையை பராமரிக்கும் பொருட்டு 2 மாதம் விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மார்க் ஜீக்கர்பெர்க்(Mark Zuckerberg), பிரிசில்லாவும்(Priscilla) தாமும் தங்களது குழந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், குழந்தைக்கென்று பிரத்யேகமான புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை சேகரிக்க துவங்கியுள்ளோம்.
குழந்தை பிறந்த அந்த முதல் மாதத்தினை எப்படி எதிர்கொள்வது எனவும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.
அவளை பராமரிப்பதற்காக இரண்டு மாதங்கள் விடுப்பில் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பணிபுரிந்து வரும் பெற்றோர்கள் தங்களது புதிதாய் பிறந்த குழந்தையுடன் அதிக நேரத்தை பங்கிட்டுக்கொள்வது, அந்த குழந்தைக்கும் குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் என ஆய்வுகள் கூறுவதாக தெரிவித்துள்ள மார்க்,
தமது பேஸ்புக் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும் போது நான்கு மாதம் வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
31 வயதான மார்க் மற்றும் பிரிசில்லா தம்பதியருக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply