11 வயதில் தொழில் தொடங்கிய சிறுமி

Loading...

11-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9aபூட்டுச் சாவியின் நவீன மாற்றம்தான் யூசர் நேமும், பாஸ்வேர்டும். சாவியை தவறவிட்டால் கூட பரவாயில்லை, பாஸ்வேர்டை தப்பித்தவறி கூட யாரிடமும் சொல்லிவிடக்கூடாது. இப்படி பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படும் பாஸ்வேர்டைக் கூட, சிலர் அசால்டாக ஹேக் செய்து விடுகின்றனர்.
எவ்வளவு கடினமான சொல்லை பாஸ்வேர்டாக வைத்தாலும், இன்று அதை ஆட்டையப்போடுவது சுலபமாகி விட்டது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, தன் வலைதளத்தின் மூலமாக, தேசிய பாதுகாப்பு முகமைகளால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவு கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்கித் தருகிறார் அமெரிக்காவில் வாழும் இந்தய வம்சாவளிச் சிறுமி மிரா மோடி.பதினோரு வயதான மிரா, நியூயார்க் நகரில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். dicewarepasswords.com எனும் தம் இணையதளத்தின் வாயிலாக, இரண்டு டாலர்களுக்கு ஒரு கடினமான பாஸ்வேர்டினை வழங்கி, இதை ஓர் சிறுதொழிலாகவே செய்து வருகிறார் மிரா மோடி.
இந்த பாஸ்வேர்டுகளை உருவாக்க, இவர் கையாளும் முறை மிகவும் எளிதானது. டைஸ்வேர் எனும் பழங்கால முறையில், விளையாடப் பயன்படும் பகடைகளை உருட்டி, அதிலிருந்து கிடைக்கும் எண்களுக்கு பொருத்தமான ஆங்கில எழுத்துகளைக் கொண்டு வார்த்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மிரா மோடியோ, ஐந்து பகடைகளை ஒன்றாக உருட்டி, அதிலிருந்து கிடைக்கும் ரேண்டமான எண்களை கொண்டு,
டைஸ்வேர் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்ட, அதற்கு பொருத்தமான வார்த்தையை குறித்துக் கொள்கிறார். இதே போல் குறைந்தது ஐந்து முறை பகடைகளை உருட்டுகிறார். இறுதியாகக் கிடைக்கும் ஐந்து சொற்களையும் ஒரே கோர்வையாகக் கோர்த்து, மிகக் கடினமான பாஸ்வேர்டினை உருவாக்குகிறார்.இந்த சொற்கோர்வையாலான பாஸ்வேர்டினை ஹேக் செய்வது மிகவும் கடினம். ஆறு முறை பகடைகளை உருட்டி,
அதன் மூலம் வரும் சொற்கோர்வையினை தேசிய பாதுகாப்பு முகமைகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஏழு முறை உருட்டினால், அந்த சொற்கோர்வையினை 2030-ம் ஆண்டு வரை யாராலும் கண்டிபிடிக்க முடியாது” என பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான அர்னால்டு ரைன்ஹோல்ட் கூறுகிறார்.
ஒவ்வொரு முறையும் இரண்டு டாலர்களை பெற்ற பின், பகடைகளை உருட்டி, பாஸ்வேர்டுகளை உருவாக்கி, அவற்றை தம் வாடிக்கையாளர்களுக்கு, அமெரிக்க அஞ்சல் சேவையின் மூலமாக அனுப்பி வைக்கிறார் மிரா மோடி.
மேலும், பாஸ்வேர்டுகளில் ஏதேனும் குறியீடுகளை கூடுதலாக சேர்த்துக் கொண்டால், தமக்கும் அது தெரியாமல் இருக்கும் என தன் வாடிக்கையாளர்களுக்கு மிரா அறிவுறுத்துகிறார். “இது தான் என்னுடைய முதல் தொழில். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதுடன், உயர்ந்த பொறுப்பையும் அளித்துள்ளது.” என்கிறார் இளம் தொழிலதிபரான மிரா மோடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply