முளைகட்டிய பயறு பராத்தா

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%beகோதுமை மாவு – 2 கப்,
உப்பு, தண்ணீர் – தேவைக்கு,
எண்ணெய்- 2 டீஸ்பூன்.
பூரணத்திற்கு…
முளைகட்டிய பயறு – 1 கப்,
பச்சைமிளகாய் – 1,
இஞ்சி – 1 துண்டு,
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்,
தனியாதூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்.


தாளிக்க…

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். பயறு, பச்சைமிளகாய், இஞ்சியை மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சீரகம் தாளித்து, அரைத்த பயறு, மிளகாய்தூள், தனியாதூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்கவும். மாவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்தி போல் திரட்டி பூரணம் வைத்து மூடி, சப்பாத்தி இட்டு, சூடான கல்லில் எண்ணெய்/நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். ஊறுகாய், தயிருடன் பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN