பிரட் கோபி ரோல்

Loading...

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d

தேவையான பொருட்கள் :

பிரெட் ஸ்லைஸ் – 10
காலிபிளவர் – 250 கிராம்
குட மிளகாய் – 2
வெண்ணெய் – 2 பெரிய ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3
டொமேட்டோ கெட்ச் அப் – தேவைக்கு
கரம் மசாலா – இரண்டு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு,
மிளகாய் தூள் – 1 சிறிய ஸ்பூன்
பிரெட் ஒட்டுவதற்கான சோள பிளவர் மாவு, தேவையான அளவு தண்ணீர்
எண்ணெய் – பொரிக்க



செய்முறை :

* முதலில் காலிபிளவர், குடமிளகாய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காலிபிளவரை சூடான உப்பு கலந்த நீரில் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
* சோள மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டு போல் செய்து வைக்கவும்.
* பிரட்டின் ஓரங்களை வெட்டி வைக்கவும்.
* கடாயில் வெண்ணெய் போட்டு அதில் ப.மிளகாய் போட்டு தாளித்த பின் காலிபிளவர், குடமிளகாய் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் டொமேட்டோ கெட்ச் அப், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
* பிரெட்டை அழகிய ரோலாக உருட்டி அதனுள் கோபி கலவையை வைக்கவும். பின் ஒரப்பகுதியை சோள மாவுகொண்டு ஒட்டி பத்துமுதல் பதினைந்து நிமிடம் காயவைக்கவும். விரும்பினால் பிரிஜ்ஜிலும் வைக்கலாம்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒவ்வெரு ரோலாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* இவ்வாறு பொரித்து எடுத்ததை குழந்தைகள் விரும்பும்படி டிசைன் டிசைனாக வெட்டி, டொமேட்டோ கெட்ச் அப்போ, அல்லது கார சட்னியுடனோ பறிமாறலாம்

Loading...
Rates : 0
VTST BN