நூடுல்ஸ் கோர்ன் கட்லெட்

Loading...

%e0%ae%a8%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%9f%e0%af%8d
தேவையான பொருட்கள்

பச்சை பட்டாணி – கால் கப்
கோர்ன் – கால் கப்
கடலை மாவு – 2 ஸ்பூன்
நூடுல்ஸ் – 1 அரை கப்
சீரக தூள் – அரை ஸ்பூன் (வறுத்து பொடித்தது)
உப்பு – சுவைக்கு
பூண்டு விழுது – அரை ஸ்பூன்
கரம்மசாலா – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் – 1 ஸ்பூன்
துருவிய சீஸ் – அரை கப்
பால் – 2 ஸ்பூன்
பிரட் தூள் – தேவைக்கு
எண்ணெய் – சிறிதளவு


செய்முறை

பச்சை பட்டாணி, கோர்ன் இரண்டையும் வேக வைத்து மசித்து கொள்ளவும். நூடுல்ஸை வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பச்சை பட்டாணி, கோர்ன், கடலை மாவு போட்டு நன்றாக கலக்கவும். அடுத்து அதில் சீரகத்தூள், உப்பு, பூண்டு விழுது, கரம்மசாலா, மஞ்சள் தூள், கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய், நூடுல்ஸ் போட்டு நன்றாக கலக்கவும்.
நூடுல்ஸை உடையாமல் கலக்க வேண்டும். கடைசியாக துருவிய சீஸ், பால் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்ததை உருண்டையாக பிடித்து வேண்டிய வடிவில் தட்டி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டி வைத்துள்ளவைகளை போட்டு இருபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான நூடுல்ஸ் – கோர்ன் கட்லெட் ரெடி

Loading...
Rates : 0
VTST BN