நம்மை இளமையாக வைத்துக் கொள்ள உதவும் பழங்கள்

Loading...

%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95தினமும் காலையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பழங்களை சாப்பிடுவதால், நம் மனதிற்கும், உடல் உறுப்புக்களுக்கும் தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.
இதனால் எப்போதும் இளமையுடன் உங்களின் மனதும் ,உடலும் நல்ல புத்துணர்ச்சியை பெறுகிறது.
காய்கறிகளில் உள்ள சத்துக்களை விட பழங்களில் கிடக்கும் சத்துக்கள் உடனடியாக நமது உடலைச் சேர்கிறது.
எனவே நாம் எந்த வகையான பழங்களை சாப்பிட்டாலும் எளிதில் ஜீரணிக்கும் சக்திகள் நமக்கு கிடைக்கிறது.
மேலும் உடலில் ஏற்படும் உபாதைகளை தடுக்கவும், நம் பருவத்திற்கு ஏற்றவாறு நம்மை இளமையாக வைத்துக் கொள்ள உதவும் பழங்களான ஆப்பில், பேரிக்காய், ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை தினமும் நாம் சாப்பிடுவதால் கிடைக்கு நன்மைகளோ ஏராளமாக உள்ளது.


ப்ளூ பெர்ரி

ப்ளூ பெர்ரியில் இருக்கும் நீல நிறத்தில் ஆந்தோ சயனைன் என்ற வேதிப் பொருள் உள்ளது.எனவே இந்த பழத்தினை தினமும் சாப்பிடுவதால், புற்று நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகள் வரவிடாமல் தடுக்கிறது.


ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் ஃப்ளேவினாய்டுகள் இருப்பதால் இது நம் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் கட்டுப்படுத்துகிறது.மேலும் குளுகோஸை கொழுப்பாக மாற்றும் என்சைமின் செயலை தடுக்கப்படுகிறது.இதனால் நம் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்கிறது.


ஸ்ட்ரா பெர்ரி

ஸ்ட்ரா பெர்ரி பழத்தில் ஆந்தோசயனைன் மற்றும் ஃப்ளேவினாய்டு போன்ற சத்துக்கள் உள்ளது. இந்தப் பழத்தினை சாப்பிடுவதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புக்களை குறைத்து, இதய நோய், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.


பேரிக்காய்

பேரிக்காயில் இருக்கும் பெக்டின் மற்றும் ஃப்ளேவினாய்டு போன்ற சத்துக்கள் நம் உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து,சர்க்கரை நோயை தடிக்கிறது.மேலும் தினமும் பேரிக்காயை சாப்பிடுவதால், உடல் பருமனை குறைத்து, ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

Loading...
Rates : 0
VTST BN