தொழில்நுட்ப உலகில் புரட்சி

Loading...

%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8dஇன்றைய உலகை தொழில்நுட்ப சாதனங்களே அதிகளவில் ஆக்கிரமித்து நிற்கின்றன என்பது கண்கூடு.
இச் சாதனங்களை உருவாக்குவதற்கு பயன்படும் ட்ரான்ஸ்சிஸ்டர்கள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
இவற்றின் அளவுகள் சிறிதாகும்போது உருவாக்கப்படும் இலத்திரனியல் சாதனத்தின் அளவும் சிறிதாகின்றது.
இப்படியிருக்கையில் தற்போது 1 நனோ மீற்றர்கள் அளவினை உடைய உலகின் மிகச் சிறிய ட்ரான்ஸ்சிஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் தலை முடி கூட 80,000 தொடக்கம் 100,000 நனோ மீற்றர்கள் தடிப்பு உடையவை. ஆனால் இந்த ட்ரான்ஸ்சிஸ்டர்கள் வெறும் 1 நனோ மீற்றர் தடிப்பே உடையது எனும்போது அது எந்த அளவு இருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ள முடியும்.
இதனை கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே வடிவமைத்துள்ளனர்.
இப் புரட்சியின் காரணமாக எதிர்வரும் காலங்களில் உருவாக்கப்படவுள்ள தொழில்நுட்ப சாதனங்களும் மிகவும் சிறிய அளவினைக் கொண்டிருக்கும் என்பது திண்ணம்.

Loading...
Rates : 0
VTST BN