கடலை மாவு கார பர்பி

Loading...

%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bfகடலை மாவு – 200 கிராம்,
நறுக்கிய முந்திரிப் பருப்பு – 30,
பச்சைமிளகாய் – 1,
கொத்தமல்லித்தழை – 4 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் – 300 மி.லி.,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
புளி கரைசல் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன் + 1 டீஸ்பூன் + பொரிக்க 200 மி.லி.

கடலை மாவு, முந்திரிப் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சைமிளகாய், புளிக்கரைசல், கொத்தமல்லித்தழை, உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும். 5 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி கடலை மாவு கலவையை ஊற்றி 15 நிமிடங்கள் இடைவிடாமல் கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
குழித்தட்டில் 1 டீஸ்பூன் எண்ணெய் தடவி கடலை மாவு கலவையை ஊற்றி சரிசமமாக பரத்தி விடவும். ஆற விட்டு சதுரங்களாக நறுக்கவும். பொரித்தெடுக்க எண்ணெயை சூடாக்கி பர்பியை பொன்னிறமாக பொரித்தெடுத்து, தேங்காய் இல்லாத பச்சை சட்னி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்

Loading...
Rates : 0
VTST BN