இயந்திரத்தின் மூலம் இயங்கும் அதிநவீன எலெக்ட்ரானிக்ஸ் இதயம்

Loading...

%e0%ae%87%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99%e0%af%8dஇயந்திரத்தின் மூலம் இயங்கும் அதிநவீன எலெக்ட்ரானிக்ஸ் இதயத்தை அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இதயம் துடிக்காது ஆனால் ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சீராக எடுத்து செல்லும் சக்தி வாய்ந்தது. இதை பிரிஸ்பேனை சேர்ந்த டாக்டர் டேனியல் டிம்ஸ் வடிவமைத்துள்ளார்.
இந்த இயத்தை செம்மறி ஆட்டுக்கு பொருத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளனர். இத்திட்டத்துக்கான பணியை கடந்த 2001ம் ஆண்டில் குவின்ஸ்லேண்ட் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் தொடங்கினார். இதற்கு பிவாகர் என பெயரிடப்பட்டுள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ் இதயத்தில் சிறிய பிளேடு டிஸ்க் உள்ளது. இது நிமிடத்துக்கு 2 ஆயிரம் தடவை சுழன்று துடிப்பின்றி உடல் முழுவதும் ரத்தத்தை பாய்ச்சும் திறன் படைத்தது.
கடந்த ஜனவரி மாதத்தில் பிரிஸ்பேன், டெக்காஸ், சிட்னி மற்றும் மெல்போன் நகரங்களை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் செம்மறி ஆட்டின் இருதயத்தை அகற்றிவிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குரிய அளவிலான எந்திர எலெக்ட்ரானிக் இதயத்தை பொருத்தி வெற்றிகரமாக சோதித்தனர்.
இதே முறையில் மனிதர்களுக்கும் இந்த இதயத்தை பொருத்த முடியும் என நம்புகின்றனர். இன்னும் 3 ஆண்டுகளில் மனிதர்களிடம் இதற்கான சோதனை முயற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN