இனி கடவுச்சொல்லால் கவலை வேண்டாம்

Loading...

%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88இணையத்தில் பல கணக்குகளுக்கு, பல கடவுச் சொற்களைப் போடுவதால், சமயத்தில் அவற்றை மறந்து, கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. ஜெர்மனியைச் சேர்ந்த ஜார் என்ற நிறுவனம், அதே பெயரில் சாவி போன்ற ஒரு சின்ன கருவியை உருவாக்கியிருக்கிறது.
பயோமெட்ரிக் கிரிப்டோ கீ எனப்படும் இது, ஒருவரது விரல் ரேகையை கடவுச் சொல்லாக பயன்படுத்த உதவுகிறது. ஜார் கருவியை, கைபேசி அல்லது மடிக்கணினி உள்ள ஆடியோ துயைில் சொருகி, பொத்தானை போல உள்ள ஜார் சாவி மீது விரலை வைத்தால், அது கைரேகையை புரிந்து கொண்டு கணக்கை திறக்க உதவும்.
சாவி போல இருப்பதால், இதை சாவி வளையத்தில் மாட்டிச் எடுத்துச் செல்லலாம். தொலைந்து போனால்? பயப்பட வேண்டியதில்லை. ஜார் கருவி எந்த தகவலையும் பதிந்து கொள்வதில்லை என்பதால், புதிய ஜார் கருவியை வாங்கி பயன்படுத்தலாம்.
கைரேகை தான் தொலையது என்பதால் இணையத்தில் பறரது கடவுச்சொல் உள்ளிட்ட தனி அடையாளங்களை அறிந்து, களவாடுபவர்களுக்கு, ஜார் பெரிய சவாலாக இருக்கும். ஜனவரி 2016ல் சந்தைக்கு வரவிருக்கும் ஜார் கடவுச் சாவியால் இனி அடிக்கடி கடவுச் சொல்லை மாற்றும் அவஸ்தை இருக்காது. ஜார் சாவியின் விலை ரூ.4,560 ஆகும். பாதுகாப்புக்கு விலை அதிகம் தான்.

Loading...
Rates : 0
VTST BN