ஹராபாரா கபாப்

Loading...

%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8dபாலக்கீரை – 2 கப்,
மீடியம் அளவு உருளைக்கிழங்கு,
தக்காளி – 2 கப்,
பச்சைப் பட்டாணி – 3/4 கப்,
சாட்மசாலாத் தூள் – 1 டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது அல்லது பொடியாக நறுக்கியது – 2 டீஸ்பூன்,
கடலை மாவு – 2 1/2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் (வறுப்பதற்கு).


எப்படிச் செய்வது?

உப்புத் தண்ணீரில் கீரையை கழுவி நன்கு வடிகட்டி குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் கடலை மாவை அதன் கலர் மாறும் வகையில் நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். மிகவும் சிவந்துவிடக்கூடாது. உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து தக்காளியையும் உருளைக்கிழங்கையும் சீவி போடவும். இத்துடன் பச்சை பட்டாணி, மிளகாய் விழுதையும் சேர்க்கவும். இந்த கபாப் கலவையை மத்தால் நன்கு மசிக்கவும். இத்துடன் காரப் பொடி, வறுத்த கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதனை உருண்டையாக தட்டி எண்ணெய் ஊற்றி நன்கு பொன்னிறமாக வறுக்கவும். இதனை சட்னி, சாஸுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply