ஸ்பெஷல் எலுமிச்சை சாதம்

Loading...

%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d
பச்ச அரிசி – 1 பெரிய கப்,
எலுமிச்சம்பழம் – 2,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 8,
எண்ணெய் – 1 1/2 டேபிள்ஸ்பூன்,
வேர்க்கடலை அல்லது முந்திரி அல்லது பச்சைப் பட்டாணி – 1/4 கப்,
துருவிய தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை,
உப்பு – தேவைக்கு.


தாளிக்க:

கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை வேக வைத்து பின் வடித்து உதிர்உதிராக ஒர் அகலமான தட்டில் பரப்பி ஆற வைக்கவும். சாதம் சூடாக இருக்கும்போதே அதன் மேல் மஞ்சள்தூள் சேர்க்கவும். ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க வேண்டியதை சேர்த்து இத்துடன் முந்திரி அல்லது வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி சாதத்தின் மேல் கொட்டி உப்பு சேர்த்து கலக்கவும். எலுமிச்சைச்சாறு பிழிந்து நன்றாக கலக்கவும்.
வேகவைத்து வடித்த பட்டாணி, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து, கடவுளுக்குப் படைத்து, பரிமாறவும். நம் விருப்பத்திற்கு தேங்காய்க்கு பதில் கேரட் துருவி சேர்க்கலாம். கேரட்டும், தேங்காயும் சேர்த்தும் கலக்கலாம். வேர்க்கடலை அல்லது முந்திரியை தனியாக வறுத்தும் அலங்கரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply