ஸ்டஃப்டு குடைமிளகாய்

Loading...

%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8dசிறிய குடைமிளகாய் – 2,
துவரம்பருப்பு – 1/4 கப்,
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 4,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.தாளிக்க…

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து.


எப்படிச் செய்வது?

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை நன்கு களைந்து 1 மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பொன்னிறமாக வந்ததும், அரைத்த விழுது, உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, உதிர் உதிராக எடுக்கவும். குடைமிளகாயை விதையை நீக்கி பூரணத்தை ஸ்டஃப்டு செய்யவும். மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து குடைமிளகாயை வைத்து சிறிது உப்பு சேர்த்து மூடிவைத்து 10-12 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். ரொட்டி, புல்கா, பூரி, நாண், புலாவுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply