வெந்தயக்கீரை ரொட்டி

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b0%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bfகோதுமை மாவு – 2 கப்,
வெந்தயக்கீரை – 1 கப் (இலை மட்டும்),
தட்டிய சின்ன வெங்காயம் – 5,
இஞ்சி – 1/4 இன்ச் துண்டு,
பூண்டு – 1 பல்,
பச்சைமிளகாய் – 1,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/4 டீஸ்பூன்,
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் தேவையென்றால் உபயோகிக்கவும்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மேலே தடவ வெண்ணெய் – தேவைக்கு.

வெந்தயக்கீரை, உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஊறவிடவும். ஊறிய வெந்தயக்கீரையை வடித்து, கொத்தமல்லித்தழையுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இக்கலவையுடன் கோதுமை மாவு, மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சப்பாத்தி மாவாக பிசைந்து வைக்கவும். மாவு தூவி வட்ட சப்பாத்தியாக பரத்தி, சூடான சப்பாத்திக் கல்லில் எண்ணெய் விடாமல் இரண்டு பாகமும் வேகவிட்டு எடுக்கவும். சூடான சப்பாத்தியின் மேல் வெண்ணெயை தடவி, காய்கறி குழம்புடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply