வெண்டைக்காய் தயிர் பச்சடி

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f
தேவையான பொருள்கள் :

வெண்டைக்காய் – 100 கிராம்
தயிர் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு

அரைக்க :

தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
மிளகாய் வத்தல் – 1
சீரகம் – 1 தேக்கரண்டி

தாளிக்க :

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் – 1/4 பங்கு
கறிவேப்பிலை – சிறிது


செய்முறை :

* வெண்டைக்காயை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
* தேங்காய், சீரகம், மிளகாய் வத்தல் மூன்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய், உப்பு சேர்த்து கிளறவும்.
* வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* தண்ணீர் வற்றி வரும் போது தயிரை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
* சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply