வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%80வெண்டைக்காய் சாப்பிடுவதால் நமது புத்தியின் கூர்மை மேம்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசை, நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விட்டமின் C போன்ற நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது.

மேலும் இந்த வெண்டைகாயை நாம் சமைத்து சாப்பிடுவதை விட திரவமாக செய்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயின் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தினமும் அந்த நீரைப் குடிக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால், அதிக நன்மைகள் கிடைக்கிறது.
வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
வெண்டைக்காயில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வருந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நமது உடலுன் நீர்ச்சத்து திரவ இழப்பை தடுத்து உடலை எப்போதும் குளுர்ச்சியாக வைக்கிறது.
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே தினமும் காலையில் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடித்து வந்தால், குடலின் இயக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
தினமும் காலையில் வெண்டைக்காய் நீரைப் குடிப்பதால், நமது உடலின் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் காலையில் வெண்டைக்காய் நீரைப் குடித்து வர வேண்டும். இதனால் ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறைக்கப் படுகிறது.
வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் விட்டமின் C போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
வெண்டைக்காய் நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், நமது உடம்பின் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள், இரத்த சோகை, மூச்சிரைப்பு, மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு, வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு போன்ற அனைத்து நோய்களையும் தடுபதற்கு ஒரு சிறந்த மருந்தாக வெண்டைகாய் ஊறவைத்த தண்ணீர் பயன்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply