வெடித்து சிதறிய IPHONE 7 | Tamil Serial Today Org

வெடித்து சிதறிய IPHONE 7

%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-iphone-7சாம்சுங் நிறுவனம் அப்பிளின் புதிய ஐபோன்களுக்கு போட்டியாக Galaxy Note 7 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
எனினும் குறித்த வகையைச் சேர்ந்த பல கைப்பேசிகள் வெடித்து சிதறியதனால் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருந்த கைப்பேசிகளை மீளப்பெற்றிருந்தது.
இச் சம்பவமானது சாம்சுங் நிறுவனத்திற்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இப்படியிருக்கையில் தற்போது iPhone 7 கைப்பேசியும் வெடித்து சிதறியுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இவ் வெடிப்பு சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ள நிலையில் வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இச் சம்பவத்தின் காரணமாக புதிய ஐபோன்களை வாங்குவதில் கைப்பேசி பிரியர்கள் தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை புதிதாக ஐபோன்களை வாங்கவுள்ளவர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கைப்பேசி உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களின் புதிய கைப்பேசிகள் இவ்வாறு வெடிப்பது தொழில்நுட்ப வல்லுனர்களால் துரதிர்ஷ்டமான சம்பவமாக நோக்கப்படுகின்றது.

Loading...
Rates : 0
VTST BN