வெங்காயக் கோஸ்

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d
தேவையானவை :-

பெரிய வெங்காயம் – 2,
பெரிய தக்காளி – 1,
உருளை – சிறியது – 1,
தேங்காய் – 1 மூடி,
வரமிளகாய் – 10,
சோம்பு – அரை டீஸ்பூன்,
சீரகம் – கால் டீஸ்பூன்,
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்,
முந்திரி – 4,
பட்டை – கால் இன்ச் ( விரும்பினால் ),
உப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
உளுந்து – அரை டீஸ்பூன்,
கிராம்பு – 1 ( விரும்பினால் ),
கருவேப்பிலை – 1 இணுக்கு


செய்முறை :-

பெரியவெங்காயத்தைத் தோலுரித்து தயிர்ப் பச்சடிக்கு நறுக்குவது போல் நீளமாக மெல்லிசாக நறுக்கவும்.
தக்காளியை துண்டுகள் செய்யவும். உருளையைத் தோலுரித்து வெங்காயம் போல் குச்சி குச்சியாக நறுக்கவும்.
வரமிளகாய், துருவிய தேங்காய், சோம்பு, சீரகம், பொட்டுக்கடலை, முந்திரி (பட்டை ) , உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
எண்ணெயைக் காயவைத்து உளுந்து கிராம்பு போட்டுத் தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் தண்ணி தண்ணியாக வதங்கியதும் உருளை, தக்காளியைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் கழித்து கருவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுத் திறக்கித் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
3 கப் தண்ணீர் சேர்க்கலாம்.
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் ருசியான பதார்த்தம் இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply