விற்பனையில் டாப் 10 கார்கள் உச்சத்தில் ஆல்ட்டோ கார் விற்பனை

Loading...

பண்டிகை காலத்தின் துவக்கத்தை எதிரொலிப்பதாகவே, கடந்த மாத கார் விற்பனை அமைந்திருக்கிறது. ஆம், அனைத்து கார் மாடல்களின் விற்பனையிலும் சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது. குறிப்பாக, மாருதி ஆல்ட்டோ கார் விற்பனையில் சக்கை போடு போட்டிருக்கிறது.

ஆல்ட்டோ தவிர்த்து, பிற மாருதி கார் மாடல்களின் விற்பனையும் மிகச்சிறப்பாக அமைந்தது. கடந்த மாதத்தில் எந்தெந்த கார்கள் எந்த இடத்தை பிடித்தன, அதன் விற்பனை எண்ணிக்கை எவ்வளவு என்பது உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 10. ஹூண்டாய் க்ரெட்டா

10. ஹூண்டாய் க்ரெட்டா

டிசைனிலும், வசதிகளிலும் கவர்ந்து விட்ட ஹூண்டாய் க்ரெட்டா விற்பனையில் தொடர்ந்து கலக்கி வருகிறது. கடந்த மாதம் 8,835 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைவிட இப்போது விற்பனை 21 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஹூண்டாய் நிறுவனத்துக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

 09. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

09. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி நிறுவனத்தின் விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. கடந்த மாதம் 9,375 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனையாகி இருக்கின்றன. மாருதி நிறுவனத்தின் எஸ்யூவி மாடல் என்பது இதற்கு வலு சேர்க்கிறது.

08. ஹூண்டாய் எலைட் ஐ20

08. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் 10,254 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அறிமுகம் செய்யப்பட்டது முதல் மிகச்சிறப்பான விற்பனையை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் பதிவு செய்து வருகிறது. டிசைன், வசதிகள் இந்த காரின் விற்பனைக்கு வலு சேர்த்து வருகின்றது.

07. ரெனோ க்விட்

07. ரெனோ க்விட்

ரெனோ நிறுவனத்தின் வர்த்தகத்தின் மிக முக்கிய மாடலாக ரெனோ க்விட் கார் மாறியிருக்கிறது. கடந்த மாதம் 7வது இடத்தில் இருக்கிறது. கடந்த மாதத்தில் 10,558 ரெனோ க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. அசத்தலான டிசைன், சிறப்பம்சங்கள், இடவசதியுடன் மிக குறைவான விலை என்பதும் இதன் பலம்.

06. மாருதி பலேனோ

06. மாருதி பலேனோ

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த மாதத்தில் 10,623 பலேனோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. சிறப்பான டிசைன், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களுடன் கவர்ச்சியான மாடலாக வலம் வருகிறது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதத்தில் 5வது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பெற்றிருக்கிறது. பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் பிரிமியம் மாடலாக இருப்பதே இதன் பலம். இதனால், விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை பெற்று வருகிறது. கடந்த மாதத்தில் 12,212 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதத்தில் 16,645 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. பட்ஜெட் விலையில், நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இதனால், தொடர்ந்து விற்பனையில் அசத்தி வருகிறது.

 03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதத்தில் தனது ஆஸ்தான மூன்றாவது இடத்தை ஒருவழியாக பிடித்துவிட்டது மாருதி ஸ்விஃப்ட் கார். கடந்த மாதத்தில் 16,746 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அசத்தலான டிசைன், சிறந்த செயல்திறன், அதிக மைலேஜ், சரியான விலை போன்றவை இந்த காரின் முக்கிய விஷயங்கள். இருந்தாலும், கடந்த ஆண்டு செப்டம்பரைவிட விற்பனை 8 சதவீதம் குறைந்துவிட்டது.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

கடந்த மாதத்தில் 18,961 டிசையர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறது டிசையர். பராமரிப்பு செலவு குறைவான செடான் கார் என்பது இதன் மிகப்பெரிய பலம்.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

கடந்த மாதம் மாருதி ஆல்ட்டோ கார் நம்பர்-1 இடத்தை பிடித்திருக்கிறது. மொத்தம், 27,750 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைவிட இப்போது விற்பனை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. மாருதி நிறுவனத்தின் சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க், குறைவான பராமரிப்பு செலவு போன்றவை இந்த காருக்கு சிறப்பான விற்பனையை அளித்து வருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply