வதக்கிய தேங்காய் துவையல்

Loading...

%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d
தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – ½ கப்
உளுத்தம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 8 (அல்லது தேவைக்கேற்ப)
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – ஒரு பல்
புளி – கோலி அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக் ஏற்ப.
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ¼ தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை


செய்யும் முறை

தேங்காய் துருவலை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து வைக்கவும். சிறிதளவு எண்ணெயை சூடாக்கி உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து, அதில் அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவும். இந்த துவையலை சாத வகைகளுக்கு தொட்டு சாப்பிடலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply