லேயர் கட் ஸ்ட்ரெயிட் கட் யூ கட் தவிர இந்தியன் ஹேர் ஸ்டைலில் புதுசா வேறென்ன இருக்கு

Loading...

%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8dதொடர்ந்து ஒரே விதமான ஹேர் ஸ்டைல் போரடித்தது. சரி ஹேர் ஸ்டைலை மாற்றித் தான் பார்ப்போமே என்று பிரபல பியூட்டி பார்லர் போனால் அங்கே விதம் விதமான ஹேர் கட்களை தேர்ந்தெடுக்க பொருத்தமான கேட்டலாக்குகள் என்று எதையும் காணோம். என்ன ஹேர் கட் வேண்டும் என்று பெயரை மட்டும் சொன்னால் அவர்களுக்குத் தெரியுமாம், அவர்களாக நமது முகத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் ஏதோ சில பெயர்களை சொன்னார்கள். ஒரு வேளை ஹேர் கட் செய்த பிறகு அந்த ஸ்டைல் பிடிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது? எதற்கு வம்பென்று எப்போதும் போல லேயர் கட் செய்து கொண்டு திரும்பி வந்தோம். எப்போதும் பெண்களுக்கு என்றால் இந்த ஸ்ட்ரெயிட் கட், யூ கட், டீப் யூ கட், லேயர் கட் மட்டும் தானா? அதிலும் பெண் குழந்தைகளுக்கானால் மஷ்ரூம் கட், சம்மர் கட், டயானா கட் இவ்வளவு தானா?! அலுப்பாகத் தான் இருக்கிறதில்லையா? இன்னும் வேறு என்னென்ன விதமான இந்தியன் ஸ்டைல் ஹேர் கட்கள் இருக்கின்றன என்று தேடிப் பார்க்கும் ஆர்வம் அப்போது தான் உயிர்த்தெழுந்தது.
ஹேர் ஸ்டைலுக்காக முதலில் நம் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது யாரென்றால் அது வாணிஸ்ரீ யாகத்தான் இருக்கும். வசந்த மாளிகையில் உயரத்
தூக்கிப் போடப்பட்ட அந்த ’பம்’ கொண்டையோடு வாணிஸ்ரீயை யாராலும் மறக்க முடியாது. வாணிஸ்ரீ க்குப் பின் நதியா ஹேர் ஸ்டைலில் மட்டுமல்ல நதியா கம்மல், நதியா மிடி, நதியா கொண்டை, நதியா பொட்டு என்று ஃபேஷன் உலகில் புது டிரெண்ட் செட்டராகவே அவதரித்தார். அவருக்குப் பின் 80 களில் பெண்குழந்தைகளுக்கு முடி வெட்டிக் கொள்ள சலூனுக்கு வரும் பெரும்பான்மையான பெற்றோர்கள் ‘ஷாலினி கட்’ பண்ணுங்க என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்வார்கள். ஷாலினி ஸ்டைல் ஹேர் கட் அப்போது அத்தனை பாப்புலர். இவர்களுக்குப் பின் தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமான நடிகை கௌதமியின் கர்லி(சுருள்) முடிக் கொண்டைக்கு அநேக ரசிகர்கள் இருந்தார்கள். சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலிலும் கௌதமியின் கர்லி ஹேர் ஸ்டைல் அழகாகவே இருந்தது. நடுவில் 90 களில் மறைந்த மலையாள நடிகை மோனிகாவின் நீளக் கூந்தலுக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். பிறகு டைட்டானிக் பட ஹீரோயின் ரோஸ், படையப்பா நீலாம்பரி என்று சிலரது ஹேர் ஸ்டைல்கள் பெண்களால் பெரிதும் விரும்பப்பட்டன. அதற்குப் பின் சில காலம் ஹேர் ஸ்டைல் உலகில் கொஞ்சம் வறட்சி! குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எவருடைய ஹேர் ஸ்டைலும் மனதில் பதிந்ததாக நினைவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பின் சில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகாவின் ஹேர் ஸ்டைல் கல்லூரி மற்றும் ஐ.டி துறைப் பெண்களால் பெரிதும் நேசிக்கப்பட்டது. ஆனால் அந்த விதமான ஹேர் ஸ்டைல் எல்லோருக்கும் எளிதில் பொருந்தாது என்பது அதிலுள்ள மைனஸ் பாயிண்ட். ஜோதிகாவுக்குப் பின் அதிக ரசிகர்களை ஈர்த்துக் கொண்டது ’நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் வரும் சமந்தாவின் ஹேர் ஸ்டைல். அவருக்குப் பின் ’நானும் ரவுடி தான்’ படத்தில் பள்ளிக் குழந்தைகள் போல ஹேர் போ மாட்டிக் கொண்டு நடமாடிய நயன்தாராவின் ஹேர் ஸ்டைலுக்கும் பெருவாரியான ரசிகர்கள் இருக்கின்றனராம். இவர்கள் மட்டுமல்ல சமீப காலமாக ஏர்டெல் 4G விளம்பரங்களில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் இளம்பெண் சாஷாவின் ஹேர் ஸ்டைல்க்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்களாம். இவ்வளவு சொல்லி விட்டு லேட்டஸ்ட் இந்தியன் ஹேர் ஸ்டைல் படங்களை கண்ணில் காட்டாமல் கட்டுரையை முடிக்க முடியுமா? இதோ உங்களுக்காக சில பல லேட்டஸ்ட் இந்தியன் ஹேர் ஸ்டைல்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply