லிப்ஸ்டிக் போடுவதனால் உதடுகளில் கருமையா அப்ப இவற்றை உபயோகிங்க

Loading...

%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4உதடுகள் வசீகரமாக இருந்தால் இன்னும் நம்மை அழகாக காண்பிக்கும். நீங்கள் அடிக்கடி லிப்ஸ்டிக் போட்டு உதடுகள் கருப்பாகிவிட்டதே என்று கவலைப்படுகிறீர்களா? இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் கருமையை போக்கி சிவந்த உதடுகள் கொடுக்கும். தினமும் தவறாமல் செய்து வாருங்கள். விரைவில் பலன் பெறுவீர்கள்.தேன் :

சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமிற்கு பதிலாக தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும். கருமையுன் வறட்சியும் மறைந்துவிடும்.வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.கற்றாழை ஜெல் :

கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை சிவப்பு நிறத்தில் மாற்றும்.மில்க் க்ரீம் :

மில்க் க்ரீம்மில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை உதடுகளை ஈரப்பதத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும். அதற்கு மில்க் க்ரீமை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அவகேடோ : அவகேடோ பழத்திலும் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்கும் குணம் இருப்பதால், இதனை உதடுகளில் தேய்த்து ஊற வைத்து பின் கழுவுங்கள்.தயிர் :

தயிரில் எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும். லிப்ஸ்டிக் போடுவதால் உண்டாகும் கருமையை நீக்குவது நீக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply