ரெட் வெல்வெட் கிரின்கில் குக்கீ

Loading...

%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8dகோதுமை மாவு – 3/4 கப்,
வெண்ணெய் – 1/2 கப்,
ஐசிங் சுகர் – 1/2 கப்,
கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளோர் – 1 டேபிள்ஸ்பூன்,
டேபிள் சால்ட் – 1/4 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்,
காய்ச்சி ஆறிய பால் – 3 டேபிள்ஸ்பூன்,
ரெட் ஃபுட் கலர் – 1/4 டீஸ்பூன்.அலங்கரிக்க…

ஐசிங் சுகர் – 1/4 கப்.


எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, கார்ன்ஃப்ளோர், கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு முறை சலித்து வைக்கவும். வெண்ணெயை பீட்டர் அல்லது விஸ்க் கொண்டு நன்கு நுரைக்க அடித்து, அதனுடன் ஐசிங் சுகர், ஃபுட் கலர் மற்றும் சால்ட் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும். இப்பொழுது சலித்து வைத்துள்ள மாவுக் கலவை சேர்த்து நன்கு கலக்கவும். மென்மையாக பிசையவும். சிறிது சிறிதாக பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டுவரவும்.
ஃபிரிட்ஜில் பிளாஸ்டிக் கவரில் சுற்றி 15 நிமிடங்கள் வைக்கவும். பின்னர், பிசைந்த மாவில் இருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து மாவு உருண்டைகளாக உருட்டவும். அலங்கரிக்க வைத்துள்ள ஐசிங் சுகரை அகலமான தட்டில் பரப்பி வைக்கவும். பின்பு உருண்டைகளை ஐசிங் சுகரில் நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும். ஐசிங் சுகர் நன்றாக ஒட்டவில்லை என்றால், கையில் லேசாக ஆயில் தடவிக்கொண்டு உருட்டவும். கட்செய்து பேக்கிங் டிரேயில் 1 இன்ச் இடைவெளி விட்டு பிஸ்கெட்டுகளை அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்சியஸ் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில், 11 நிமிடங்கள் 170 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். டிரேயை வெளியில் எடுத்து ஆற வைத்து எடுத்து வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply