மைசூர் ரசம்

Loading...

%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d

தேவையான பொருட்கள்

தக்காளி – 2
பூண்டு – 6பல் (தோலுடன்)
துவரம் பருப்பு – 1/4 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
மல்லித்தளை – சிறிதளவு
சேர்க்க வேண்டிய தூள் வகைகள்
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
காயத் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு


தாளிக்க

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
சீரகம் – 1தேக்கரண்டி
கடுகு, – சிறிதளவு
வறுத்து அரைத்துக் கொள்ள
சீரகம் – 1தேக்கரண்டி
நல்ல மிளகு – 1தேக்கரண்டி
தானியா – 1 மேஜைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
துவரம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் – 1 மேஜைக்கரண்டிசெய்முறை

துவரம் பருப்பினை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிரசர் குக்கரில் வேக வைத்து கொள்ளவும். வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து வறுத்து கொள்ளவும்
இத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும்
தக்காளியினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பூண்டினைநசுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பூண்டு,தக்காளியினை சேர்த்து 1-2 நிமிடங்கள் வதக்கவும்.
புளியினை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.பின்பு தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளி தண்ணீர் சேர்த்து அதனுடன் வேக வைத்த துவரம் பருப்பு, தூள் வகைகள் என அனைத்தையும் சேர்த்து 2-3 நிமிடங்கள் சிறிய தீயில் வேக விடவும்
கடைசியில் அரைத்து வைத்துள்ள கலவை மற்றும் கொத்தமல்லி சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வைக்கவும்.கொதி வரும் போது அடுப்பினை அணைத்து விடவும்.
சுவையான எளிதில் செய்யக் கூடிய மைசூர் ரசம் ரெடி.இத்துடன் உருளை வறுவல் கூட்டு அப்பளம் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply