மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய டேட்டா சென்டர்

Loading...

%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9a%e0%af%8a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bfகணணி உலகின் மகுடமாக திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனம் இயங்குதளம் உட்பட பல மென்பொருட்களை வடிவமைத்து வழங்கி வருகின்றது.
இதற்கு மேலாக ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு, கிளவுட் ஸ்டோரேஜ் சேவை என பல்வேறு பரிமாணங்களையும் அடைந்துள்ளது.
இவ்வாறான மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய டேட்டா சென்டர் ஒன்றின பிரான்ஸ் நாட்டில் நிறுவ உள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதன் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கிளவுட் ஸ்டோரேஜ் சேவையினை சிறந்த முறையில் வழங்க தீர்மானித்துள்ளது.
இத்திட்டத்திற்காக 3 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் அளவை விட 2017ம் ஆண்டு இரு மடங்கு ஸ்டோரேஜ் பயன்படுத்தப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த மேலதிக தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் 2017ம் ஆண்டில் மேற்கண்ட திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு சேவையினை ஆரம்பிக்கும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply