முடி உதிர்கிறது என்ற கவலையா

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2முடி உதிர்தல் என்பது தற்போது பெரும் பிரச்சனையாக முளைத்துள்ளது.
ஒருகாலத்தில் முடி பற்றி கவலையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். தற்போது உலக அழகுக்கலை பற்றியும் அழகு சாதனப் பொருட்கள் பற்றியும், உடல் அழகை, முக அழகை, சிகை அலங்காரத்தை அருமையாக பேணிக் காப்பது எப்படி போன்ற சொல்லாடல்கள் பெருத்துவிட்டதால் முடி விழுதல் என்பது ஒரு கேலிக்குரியதாக மாறிவிட்டது.

இதற்கான காரணத்தை நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.


காரணம் 01

மோசமான உணவுப் பழக்கமும் முடியின் வளர்ச்சியைத் தடுக்கும் என்பது தெரியுமா?
ஆம், ஆரோக்கியமற்ற உணவுகளை எந்நேரமும் உட்கொள்ளும் போது, போதிய விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உடலுக்கு கிடைக்காமல், முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களின்றி, முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.
அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட், உடல் எடையைக் குறைக்கும் அதே சமயம் முடியின் வளர்ச்சியைக் குறைக்கும்.


காரணம் 02

உங்களுக்கு முடி வளராமல் இருப்பதற்கான காரணங்களுள் மற்றொன்று டென்சன்.
ஒருவர் அளவுக்கு அதிகமான மனதளவில் கஷ்டப்பட்டால், அது முடியின் வளர்ச்சியையும் தான் பாதிக்கும்.
மேலும் தலைமுடியின் வேர்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுத்தாலும், முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.


காரணம் 03

தலைமுடி வேகமாக உலர வேண்டும் என்பதற்காக பலர் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவார்கள்.
இப்படி ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்தினால், அதனால் மயிர்கால்கள் பாதிக்கப்பட்டு, முடி உதிர்வதோடு, அதன் வளர்ச்சி முழுமையாக தடுக்கப்படும்.
அதேப் போல் வெளியே வெயிலில் செல்லும் போது, தலைக்கு ஏதேனும் ஒரு துணியை கட்டிக் கொண்டு செல்லுங்கள்.
இல்லாவிட்டால் சூரியக்கதிர்களின் நேரடியான தாக்கத்தால் தலைமுடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.


காரணம் 04

தற்போது நிறைய பேர் தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பதில்லை. இப்படி எண்ணெய் வைக்காமல் இருப்பதால், தலைமுடி மிகுந்த வறட்சிக்குள்ளாகி, முடி வெடிப்பை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது.


காரணம் 05

தலைமுடி அதிகம் உதிர்வதற்கு விட்டமின் குறைபாடும் ஓர் முக்கிய காரணம். தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், அதன் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம்.
எனவே முடி அதிகம் உதிர்ந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரையின் பேரில் நடந்து கொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply