முகம் மொழுமொழுவென்று அழகாக இருக்க

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%86%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85பாதாம் பருப்பை அரைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் அளவு பாதாம் பொடியும், 1ஸ்பூன் அளவு தேனும் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் பலப்படும். அழகும் கூடும்.
· தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குணமாகும். இரத்தசோகை குணமானால் உடல் ஆரோக்கியம் பெறும்.
· புதினாவுடன் தேங்காய் கலந்து சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவும் எளிதில் சீரணமாகும். நன்கு பசி தூண்டும். முகப் பொலிவும் உண்டாகும்.
· உலர்ந்த திராட்சைப் பழமோ அல்லது பேரீச்சம் பழமோ பாலில் ஊறவைத்து, அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவு உணவுக்குப்பின் படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் நலம் பெறும். முகம் வசீகரமாக இருக்கும்.
· பப்பாளிபழம், ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் கன்னக்குழிகள் உண்டாகாது.
· தினமும் ஏதாவது ஒரு கீரை, பசுநெய் சேர்த்துக்கொள்வது நல்லது. உடலுக்குத் தேவையான ஓய்வு தேவை. அதிக ஓய்வும் உடலைக் கெடுக்கும். மேலும் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் முகம் எப்போதும் பொலிவாக இருக்கும். ஆனந்தம் அழகைக் கூட்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply