மீன் பொழிச்சது

Loading...

%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81மீன் துண்டுகள் – 3
ஊறவைக்க…
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – சிறிது
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

மசாலாவிற்கு…

கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
இஞ்சி – 1
பூண்டு – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – சிறிது
கொத்தமல்லி இலை – 3 தேக்கரண்டி
தடித்த தேங்காய் பால் – 1/4 கப்
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி


எப்படிச் செய்வது?

மீன் துண்டுகளை எடுத்து உப்பு மற்றும் மசாலா பொடிகள் சேர்த்து அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்து, 10 நிமிடங்கள் ஊறவிடவும். கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பின் மீன் துண்டுகளைப் போட்டு இருபுறமும் வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் சீரகம், கடுகு சேர்த்து பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். நன்கு கலந்து பொன் நிறமாகும் வரை சமைக்கவும்.
மீதமுள்ள உப்பு மற்றும் மசாலா பொடிகள் சேர்த்து தக்காளியை சேர்க்கவும். வெந்த பின் கொத்தமல்லி இலை நிறைய சேர்த்து அதனுடன் தடித்த தேங்காய் பால் ஊற்றி கெட்டியான வரை வேக விடவும். பின் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். இப்போது வாழை இலை மீது ஒரு ஸ்பூன் மசாலா போட்டு ஒரு மீன் துண்டை அதில் வைத்து இன்னும் சிறிது மசாலாவை அதில் போட்டு அதை மடித்து வைக்கவும். அதன் மேல் சில்வர் பேப்பர் கொண்டு மடித்து சூடான தாவா மீது வைத்து இருபுறமும் சமைத்து எடுக்கவும். சுவையான மீன் பொழிச்சது தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply