மீன் உருண்டை

Loading...

%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88
தேவையான பொருட்கள்:-

வஜ்சிர மீன் – 2
முட்டை – 3
மிளகாய் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
உருளைக்கிழங்கு – 4
பூண்டு, இஞ்சி பேஸ்ட்- சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

மீனை துண்டுகளாக செய்து அதில் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும். பின்பு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் இஞ்சி,பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டுக்கொள்ளவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லியையும் போட்டு வைத்துக்கொள்ளவும்.
ஊறவைத்த மீனை பொரித்து எடுத்துக்கொள்ளவும். பொரித்த மீனை உதிர்த்து உருளைக்கிழங்கு கலவையில் சேர்த்துக் கொள்ளவும். இவற்றை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
இதனுடன் முட்டையை உடைத்து நன்றாக அடித்து அதில் ஊற்றிக் கொள்ளவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
(ஏனென்றால் உப்பு மீனில் சேர்த்து உள்ளோம்) நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
உருண்டை போடும் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். மீன் உருண்டை தயார்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply