மினி இட்லி மஞ்சூரியன்

Loading...

%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d
தேவையானவை:-

இட்லி – 2 அல்லது மினி இட்லி – 25,
குடைமிளகாய் – 1 பெரிய வெங்காயம் – 1.
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் ,
உப்பு –அரை டீஸ்பூன்,
சீனி – கால் டீஸ்பூன்,
அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை,
மைதா – 1 டேபிள் ஸ்பூன்,
கார்ன்ஃப்ளோர் – 1 டேபிள் ஸ்பூன்,
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்.
எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.


செய்முறை:-

இட்லிகளை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அல்லது மினி இட்லி என்றால் அவற்றை அப்படியே உபயோகிக்கலாம்.
மைதா, கார்ன்ஃப்ளோரை கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து மினி இட்லிகளை அதில் நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
ஆலிவ் ஆயிலை பானில் காயவைத்து சதுரமாக வெட்டிய குடைமிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து உப்பு சீனி அஜினோமோட்டோ போட்டு வதக்கவும்.
இதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
இரண்டு நிமிடம் கொதித்ததும் , பொரித்த இட்லித் துண்டுகளைப் போட்டுக் கலக்கி இறக்கிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply