மிக்ஸ்டு வெஜிடபிள் போண்டா

Loading...

%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9fஉருளைக்கிழங்கு – 1,
காய்க்கலவை – 1/2 கப்,
வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 4,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்.தாளிக்க…

எண்ணெய் – தேவைக்கு,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.


மேல் மாவிற்கு…

கடலை மாவு – 1/2 கப்,
அரிசி மாவு – 1/4 கப்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்கறிகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மூடி வேகவைக்கவும். வெந்ததும் மசித்த உருளைக்கிழங்கு, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் எலுமிச்சை பழ அளவிற்கு உருட்டி வைக்கவும். மேல் மாவிற்கு கொடுத்ததை தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply