மனிதர்களின் குரலை கேட்கும் ஆற்றல் சிலந்திகளுக்கு உண்டு

Loading...

%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81சிலந்திகள் நாம் எதிர்பார்ப்பதை விடவும் பயங்கரமானதாகவும், பல சிறப்பியல்புகளைக் கொண்டதுமான உயிரினம் என புதிய ஆய்வு ஒன்றின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றுக்கு காதுகள் காணப்படாத போதிலும் சில மீற்றர்கள் தொலைவில் மனிதர்கள் கதைப்பதை கேட்கும் ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம் சிலந்திகளின் கால்களில் காணப்படும் உரோமங்கள் காற்றில் ஏற்படும் அதிர்வை உணரக்கூடியதாக இருக்கின்றது.
இதனால் காற்றின் ஊடாக கடத்தப்படும் ஒலியினை அதன் அதிர்வுகளைக் கொண்டு சிலந்திகள் உணருகின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் சிலந்திகளின் இருப்பிடத்திலிருந்து 5 மீற்றர்களுக்கு அப்பால் எழுப்பப்படும் ஒலியினை அவற்றினால் உணர முடியாது என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை இவற்றின் கால்களில் உள்ள உரோமங்களில் நீர் துளிகள் சிந்தி ஈரலிப்பாக மாறின் ஒலியினை சீராக கேட்க முடியாது எனவும், ஏனைய தருணங்களில் 80-130 Hz அதிர்வெண் வீச்சிலுள்ள ஒலியினை உணர முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply