மணப்பெண்ணுக்கு புடவை எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

Loading...

%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81திருமணம் என்பது நம்முடைய வாழ்வில் ஒரே ஒருமுறை நடக்கும் அற்புதமான தருணம்.
திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருடைய பார்வையும், கவனமும் அந்த நிகழ்ச்சியில் ஹீரோயினான மணப்பெண் மீது தான் இருக்கும்.

நம்முடைய வாழ்வில் கணவன் மனைவி உறவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு திருமண விழாவில் மணமகன் மற்று மணமகள் உடுத்துக் கொள்ளும் உடைகள் மிகவும் அழகாக அடுத்தவர்களைக் கவரும் வண்ணம் இருக்க வேண்டும்.


மணப்பெண்ணுக்கு புடவை எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

முதலில் மணப்பெண்ணுக்கு எந்த நிறத்தில் புடவை எடுத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு என்று புடவை எடுக்கும் போது, நல்ல கடைகளை தேர்வு செய்து, அங்கு ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள டிசைன்களை தவிர்த்து, புதிய மாடல்களை பார்த்து எடுக்க வேண்டும்.
மணப்பெண் ஸ்லிம்மாக இருந்தால், கற்கள் பதித்த பட்டுப் புடைவைகளை தேர்வு செய்ய வேண்டும். இது அந்த மணப்பெண்ணை மிகவும் அழகாக காட்டும்.
மணப்பெண்ணின் திருமணத்திற்கு தேவையான பட்டுப் புடவைகள் மற்றும் தங்க நகைகளை தேர்வு செய்யும் போது பகல் நேரத்தில் வெளிச்சத்தில் எடுக்க வேண்டும்.
மணப்பெண்களின் மூகூர்த்தத்தில் உடுத்திக் கொள்ளும் புடவைகள் பெரும்பாலும் மஞ்சள், மெரூன், பச்சை போன்ற நிறங்களில் இருக்குமாறு தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
மணப்பெண்ணுக்கு புடவைகளை தேர்வு செய்யும் போது, அவர்களின் நிறம் மற்றும் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு வாங்கினால் திருமணத்தின் போது அவர்கள் கட்டும் புடவைகள் மணப்பெண்ணை மிகவும் அற்புதமாக காட்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply