பொரிச்ச குழம்பு

Loading...

%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81
காய்கறிகள் (கேரட், பீன்ஸ், புடலங்காய், உருளைக்கிழங்கு) – 1/4 கிலோ,
பாசிப்பருப்பு – 1 கப்,
புளி – சிறிது,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்,
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு – தேவைக்கு.

அரைக்க…

உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 3 (இவை அனைத்தையும் வறுத்து பொடி செய்யவும்).

பாசிப்பருப்பை வேகவைத்து கடைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அனைத்து காய்கறிகளையும் நன்கு வதக்கவும். கடைந்த பருப்பை ஊற்றவும். மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து, புளிக்கரைசல் ஊற்றவும். அரைத்த பொடியை 2 அல்லது 3 டீஸ்பூன் போடவும். மற்றொரு கடாயில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து காய்கறிகள் கலவையில் கொட்டி உப்பு கலந்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply