பொடுகை அறவே ஒழிக்க 4 நல்ல வீட்டு வைத்தியங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவும்

Loading...

%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-4-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5தலையை வாரும்போதோ அல்லது தலையை சொரியும்போதோ, வெள்ளை நிற துகள்கள் கண் புருவத்தில் அல்லது தோளில் அல்லது நீங்கள் உடுத்திருக்கும் துணியில் விழுந்ததென்று சொன்னால், டான்ட்ரப் Dandruff எனப்படும் பொடுகு வந்திருக்கிறது என்று அர்த்தம். இந்த பொடுகு சில சமயங்களில் தலையில் கட்டியையும் உருவாக்கும். பொடுகு தொல்லையால் நீங்கள் தலையை தொடர்ந்து சொரிந்தால், உங்கள் தலையின் தோல் சிவந்து போவதற்கும் வாய்ப்பு உள்ளது.இந்த பொடுகு வர காரணங்கள் யாவை?

1. மன அழுத்தம்
2. சரியில்லாத ஷாம்பூ
3. அதிக குளிர் அல்லது அதிக வெப்பம்
4. சோர்வு

இவை அனைத்தும் பொடுகு வருவதற்கு வழிவகுக்கும்.

நீங்கள், உங்கள் தலையிலும், தலை முடியிலேயும் செயற்கையான ஷாம்பூவை பயன்படுத்துவதால் இந்த மாதிரியான பொடுகு வரலாம்.தலையில் பொடுகு அதிகரிப்பதர்க்கான காரணங்கள்:

1. சரியில்லாத உணவு
2. மலச்சிக்கல்
3. உடல் நலக்குறைவு
4. தொற்று நோயால் சக்தியை இழப்பது

ஆனால், பொடுகை நினைத்து கவலை வேண்டாம். ஆயுர்வேதத்தில், பொடுகை எதிர்பதற்க்கும், பொடுகை போக்குவதற்கும் சில பலனுள்ள வழிகள் உள்ளன.வைத்தியம்-1:

முதலில் ஒரு வாணலியில் நான்கு தேக்கரண்டி தேங்காய் எண்ணையை ஊற்றவும். அது சூடாகும்போது, ஒரே ஒரு கற்பூரத்தை அதில் சேர்க்க வேண்டும். அதை நன்றாக கலக்க வேண்டும். என்னை வேதுவேதுவப்பாகும்வரை காத்திருக்கவும். இந்த எண்ணையை கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து இரவு முழுக்க அப்படியே விடவும்.வைத்தியம்-2:

இரண்டு தேக்கரண்டி வெந்தயம் எடுத்துகொள்ளவும். இதை இரவு முழுக்க தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர், இதை நன்றாக வடிகட்டி, வெந்தய விதையை எடுத்துகொள்ளவேண்டும். ஊறின விதையை நன்றாக சாந்து போல் அரைத்துகொள்ள வேண்டும். பின்னர், இந்த சாந்தை தலையில் நன்றாக தடவிக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் மசாஜ் செய்து விடவேண்டும். பின்னர், சீயக்காய் தூள் அல்லது புங்கங்காய் கொண்டு தலையை நன்றாக கழுவ வேண்டும்.


வைத்தியம்-3:

இரண்டு முட்டைகளில் இருந்து வெள்ளை கருவை எடுத்துகொள்ள வேண்டும். அதில் நான்கு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேற்றுகொள்ள வேண்டும். நன்றாக கலக்கவும். இந்த கலவையை தலையில் தடவி, அரைமணி நேரம் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.வைத்தியம்-4:

கைநிறைய வேம்பு இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்பு இதை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக்கொள்ளவும். பின்பு இதை நன்றாக கலக்கவேண்டும். முதலில், உங்கள் தலையை இந்த தண்ணீரால் கழுவிவிட வேண்டும். பிறகு, நல்ல தண்ணீரால் தலையை கழுவிவிட வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply