பெண்கள் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் ஓர் எச்சரிக்கை

Loading...

%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88பொதுவாக குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதிக அக்கறை செலுத்தும் பெண்கள், தன் உடல்நிலை பற்றி கவலைப்படுவதில்லை.

நோயின் அறிகுறிகள் தென்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விடுகின்றனர், இதுவே நாளடைவில் பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.
மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அல்லது மாதவிடாய் முடிவுறும் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதற்கு இடைப்பட்ட காலங்களில் அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால், அது 35 வயதுக்கு மேல் கட்டியாக மாறி புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
குழந்தை பெற்ற பிறகு தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் வெள்ளை நிறத்தில் இருப்பது இயல்பு. ஆனால் ஒரு மார்பில் மட்டும் ரத்த நிறத்தில் பால் வடிதல் ஏற்படுவது மிகவும் அபாயமான அறிகுறி. உடனே மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
பெண்கள் மலம் கழிக்கும் போது ரத்தம் வெளிப்பட்டால், அதற்கு இரைப்பை குடலில் உள்ள ரத்தம் கசிதலின் காரணமாக இருக்கும். மேலும் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சுத் திணறல், கழுத்து வலி போன்ற பிரச்சனைகளுடன் சேர்ந்து மார்பு வலி ஏற்பட்டால் அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறி. இவ்வாறு அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.
பெண்களின் உடம்பில் இருக்கும் மச்சம் திடீரென பெரிதாவது அல்லது நிறம் மாறி அரிப்பு ஏற்பட்டால் சரும மருத்துவ நிபுணரிடம் உடனே பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதனால் சரும பிரச்சனைகள் ஏற்படுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளது.
மாதவிடாய் நாட்களில் காய்ச்சல், உடல்சோர்வு இது போன்ற அறிகுறிகளுடன் வலியுடன் ரத்தக்கசிவுகள் அதிகமாக இருந்தால், கர்ப்பபையில் கட்டிகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
சில பெண்களின் பெண்ணுறுப்பு பகுதியில் அடிக்கடி வெள்ளைப்படுதல் ஏற்பட்டு அதிக துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது பொதுவாக பெண்களுக்கு இருப்பது இயல்பு. பெண்ணுறுப்பு பகுதியில் இருந்து, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில், வெள்ளைப்படுதல் ஏற்பட்டு, அந்த பகுதியில் எரிச்சல் மற்றும் வலிகள் ஏற்பட்டால், அந்த அறிகுறிகள் மூலம் பால்வினை நோய். கர்ப்பப்பையில் புற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply